08th June 2024 20:04:01 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் திருகோணமலை மகாமாயபுரத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவியை 07 ஜூன் 2024 அன்று பயனாளியிடம் கையளித்தார்.
சமய சம்பிரதாயங்களுக்கு மத்தியில் பயனாளியான திருமதி யசோதரா லக்மாலி அவர்களிடம் இராணுவத் தளபதி வீட்டை வழங்கி வைத்தார். 2 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எச்ஜிகேஎஸ் தர்மதாச ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ், மவுண்ட் லாவினியா விடுதியின் தலைவர் திரு. ரொஹான் குணசேகர அவர்களின் நிதியுதவியில் 2 வது (தொ) கஜபா படையணியின் படையினரால் இந்த புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, பிரிகேட் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச பொதுமக்கள் கலந்துகொண்டனர்.