07th June 2024 08:12:49 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் மாதுருஓயா இராணுவ பயிற்சி பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை 06 ஜூன் 2024 அன்று திறந்து வைத்தார். வருகை தந்த இராணுவத் தளபதியின் வாகன தொடரணிக்கு படையினர் மரியாதை செலுத்தியதுடன் இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கே.டி.பீ சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார்.
இந்நிகழ்வின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் "கேப்டிவேட்" கேட்போர் கூடத்தை நாடா வெட்டி பாதாகையை திறைநீக்கம் செய்து உத்தியோகபூர்வமாக திறந்து வைக்க அழைக்கப்பட்டார். பின்னர், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணியை விளக்கும் சிறு வீடியோ காட்சி திரையிடப்பட்டது. இராணுவ பயிற்சி பாடசாலையில் பாடநெறி பங்கேற்பாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் 400 பேர் அமரும் திறன் கொண்ட கேட்போர் கூடத்தையும் அதன் உட்புறத்தையும் தளபதி பார்வையிட்டார். 3 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் வழங்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் பணியாளர்களின் உதவியினால் இப்பணி வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது.
பின்னர் தளபதி எதிர்ப்பு கிளர்ச்சி மற்றும் வனப்போர் யுத்திகள் பாடநெறியிலுள்ள வெளிநாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், விஜயம் செய்த இராணுவத் தளபதிக்கும் வெளிநாட்டு அதிகாரிகளுக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அன்றைய நாளை நினைவுகூரும் வகையில், அவர் இராணுவ பயிற்சி பாடசாலையில் பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு அதிகாரிகளுடன் குழுப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
பின்னர், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நடுவதற்கு அழைக்கப்பட்டார். அதன் பின்னர், வருகை தந்த இராணுவ தளபதி மற்றும் இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதிக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
தளபதி தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். மேலும் விருந்தினர் பதிவேட்டுப்புத்தகத்தில் பாராட்டுக் குறிப்புகளை எழுதியதுடன் அன்றைய நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி, பொதுப்பணி பணிப்பாளர் நாயகம், பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.