04th June 2024 19:56:57 Hours
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைப்பு மாநாடு 2024 ஜூன் 04 ஆம் திகதி கடுவளை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, கௌரவ. பிரேம்நாத் சி. தொலவத்த, ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ ஆகியோருடன் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்.
இடம்பெயர்ந்தவர்களுக்கு எப்படி உணவு வழங்குவது, தகவல் தொடர்பு சேவைகளை விரைவாக மீட்டெடுக்கும் முயற்சிகள் மற்றும் அவசர காலங்களில் இராணுவத்துடன் நிவாரண முயற்சிகளை ஒருங்கிணைத்தல் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடலில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அரச நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் அனர்த்த நிவாரணப் பணிக்கு இராணுவம் தேவையான உதவிகளை மேற்கொள்ளும் என இராணுவத் தளபதி தெரிவித்தார்.
மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மாநாட்டைத் தொடர்ந்து, முனிதாச குமாரதுங்க வித்தியாலயத்தில் தங்கியுள்ள 53 குடும்பங்களைச் சேர்ந்த 235 பேர் மற்றும் போமிரிய அசோகராமய விகாரையில் தங்கியுள்ள 60 குடும்பங்களைச் சேர்ந்த 310 பேர்களை குறித்த இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர்.
இந்த மாநாட்டில் 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.