Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2024 20:00:17 Hours

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 35 வருட புகழ்பெற்ற சேவையின் பின்னர் ஓய்வு பெறுவதற்கு முன்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை இராணுவ தலைமையகத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் 2024 ஜூன் 03 திகதி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி அவர்களின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த செயல்பாட்டிற்காக தனது பாராட்டினை தெரிவித்தார். குறிப்பாக ஓர் அதிகாரியாக, பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் இறுதியின் போது அவரது விலைமதிப்பற்ற பங்களிப்பையும், போருக்குப் பிந்தைய காலத்தில் அவர் தொடர்ந்து கடமையாற்றியதையும் இராணுவத் தளபதி குறிப்பாக எடுத்துரைத்தார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் போது சிரேஷ்ட அதிகாரியின் விலைமதிப்பற்ற பங்களிப்பையும், அவர் தனது வாழ்க்கை முழுவதும் தனது அர்ப்பணிப்புள்ள குடும்பத்தின் முக்கிய பங்கையும் தெரிவித்துக்கொண்டார். இதற்கு பதிலளித்த மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் இராணுவத் தளபதியால் தனக்கு வழங்கப்பட்ட உறுதியான வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார். உரையாடல்களின் முடிவில், இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்பத்தினருக்குப் பரிசுகளுடன் பாராட்டு மற்றும் பாராட்டுச் சின்னமாக ஒரு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஸ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம் இங்கே:

இராணுவ பதவி நிலை பிரதானியான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பாடநெறி இல - 30 இன் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டார். இந்திய இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி- தியத்தலாவ ஆகியவற்றில் இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் 09 ஜூன் 1990 இல் இரண்டாம் லெப்டினன் நிலையில் கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய காலப்பகுதியில் தொடர்ச்சியாக அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட பின்னர், 07 மே 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2024 ஜூன் 06 முதல் 55 வயதில் இலங்கை இராணுவ நிரந்திர படையணில் இருந்து ஓய்வு பெறுகின்றார். அவர் ஓய்வுபெறும் போது, அவர் இராணுவ தலைமையத்தின் இராணுவ பதவி நிலை பிரதானி, கஜபா படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.

6 வது கஜபா படையணியின் குழு தளபதி, 6 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, இராணுவ பயிற்சி பாடசாலையின் நிறைவேற்று அதிகாரி, 6 வது கஜபா படையணயின் நடவடிக்கை மற்றும் பயிற்சி அதிகாரி, அடிப்படை ஆயுத சுரங்கத்தின் (மருதானை) ஆய்வு அதிகாரி, இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் பொதுப் பணிநிலை அதிகாரி 2 (பயிற்சி), 3 வது கஜபா படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக உபகரண பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2, 4 வது கஜபா படையணியின் பதில் கட்டளை அதிகாரி, 3 வது இயந்திர காலாட் படையணியின் பதில் கட்டளை அதிகாரி, இராணுவத் தலைமைகை ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 (நிதி), இராணுவத் தலைமைகை ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் பணி நிலை அதிகாரி 2 (நிர்வாகம்), போக்குவரத்து முகாமின் பணிநிலை அதிகாரி 2 - அனுராதபுரம், பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர், 8 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, 19 வது இலங்கை பாதுகாப்பு பிரிவின் ஹைட்டி ஐ நா அமைதி காக்கும் பணி குழுவின் குழு தளபதி, 522 வது காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, கஜபா படையணி தலைமையகத்தின் நிலைய தளபதி, இராணுவ தலைமையக செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, நியூயோர்க் ஐக்கிய நாட்டின் இலங்கைக்கான நிரந்தர தூதுவர் (இராணுவ ஆலோசகர்), மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் பதவி நிலை பிரதானி , மற்றும் கஜபா படையணியின் படைத் தளபதி போன்ற நியமனங்களை அவர் தனது பணியின் போது வகித்துள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய காலத்தில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவையைப் பாராட்டி அவருக்கு ரண விக்கிரம பதக்கம் மற்றும் ரண சூர பதக்கம் என்பன வழங்கப்பட்டுள்ளன. அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை முடித்துள்ளார், இதில் குழு தளபதிகள் தந்திரோபாய பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத அதிகாரிகளின் பாடநெறி, அடிப்படை பாராசூட் பயிற்சி பாடநெறி, போர் விமான தாக்குதல் பயிற்சி, அதிகாரவாணைக்கு முன்னரான பயிற்சி - இந்தியா, இளம் அதிகாரிகள் பாடநெறி - இந்தியா, கனிஷ்ட கட்டளை பாடநெறி- இந்தியா, ஐக்கிய நாட்டின் அமைதி காக்கும் நடவடிக்கை குழு தளபதிகள் பாடநெறி - நேபாளம், விரிவான நெருக்கடி முகாமை பாடநெறி - ஹவாய், மற்றும் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி – சீனா போன்ற கற்கைகளை அவர் பயின்றுள்ளார்.