03rd June 2024 18:33:46 Hours
கெமுனு ஹேவா படையணியின் நிர்வாக பரிசோதனையானது இலங்கை கஜபா படையணியின் படைத்தளபதியும் இராணுவ பதவி நிலை பிரதானியுமான மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்களால் கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் 31 மே 2024 நடத்தப்பட்டது.
இதன்போது கெமுனு ஹேவா படையணி தலைமையக நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்படுவதற்கு முன்னர் நிலைய தளபதியினால் அன்புடன் வரவேற்கப்பட்டார். சம்பிரதாய நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் கெமுனு ஹேவா படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டப்ளியூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டியூ இராணுவத் தலைமையகத்தின் பல்வேறு பணிப்பகங்கள் மற்றும் கிளைகளின் பணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகளை வரவேற்றார்.
தொடர்ந்து, நிர்வாக ஆய்வுகளின் முக்கியத்துவத்தை பதவி நிலை பிரதானி எடுத்துரைத்தார். வெவ்வேறு பணிப்பகங்கள் மற்றும் கிளைகளின் பணிப்பாளர்கள் மற்றும் பணிநிலை அதிகாரிகள் தங்கள் அவதானிப்புகளை சமர்ப்பித்து, அத்தகைய சிக்கல்களைத் தீர்ப்பதற்கான நடைமுறைகளை வகுத்தனர். கெமுனு ஹேவா படையணியின் அனைத்து கட்டளை அதிகாரிகள் மற்றும் அனைத்து பணிநிலை அதிகாரிகளும் நிர்வாக ஆய்வு கலந்துரையாடல்களில் பங்குபற்றினர்.