02nd June 2024 21:03:10 Hours
மறைந்த மாபாலகம சிறி சோமிஸ்ஸரநாயக்க தேரரின் கருத்தின் அடிப்படையிலும், கொஹுவளை ஸ்ரீ தத்துமாலு விஹாரய பீடாதிபதி வண. பிட்டிகல சோனுத்தர நாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழும் நிர்மாணிக்கப்பட்ட கொஹுவளை 'குரு தேவ சுவ அரண' பிக்கு வைத்தியசாலை திறப்பு விழாவில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டார்.
ஹோமாகம, கிரிவத்துடுவ, ஐந்து மாடி மற்றும் மூன்று மாடிக் கட்டிடங்களைக் கொண்ட இந்த பிக்கு மருத்துவமனை வளாகம் முப்படைக்களின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் 2024 ஜூன் 1 அன்று திறந்து வைக்கப்பட்டது. இக் கட்டிடத்தில் 50 பிக்குமார்களுக்கான சிகிச்சை மற்றும் 500 பிக்குமார்களுக்கான தியான சூழலை வழங்கக்கூடியாதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 6வது இலங்கை பொறியியல் படையணி இப் பணியை குறுகிய காலத்தில் முடிக்க தேவையான மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்கியது.
மதகுருமார்கள் உட்பட தென் கொரியப் பிரதிநிதிகள், இலங்கை வெகுஜன ஊடக அமைச்சர் கௌரவ. (காலாநிதி) பந்துல குணவர்தன, இலங்கை சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ. சிசிர ஜெயக்கொடி, (சட்டத்தரணி), இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியு மற்றும் ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே பிரதீப் நிலங்தேல ஆகியோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சம்பிரதாய நிகழ்வுகளின் பின்னர், பிரதம அதிதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தென்கொரியாவின் லோங் போம்க் விகாரையின் நீங்ஹேங் பிக்கு அவர்களுக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை கையளித்தார்.
இந் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள்,அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.