Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd June 2024 18:35:20 Hours

சீதாவாக்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கான வெள்ள நிவாரணப் பணிகள் குறித்து ஒருங்கிணைப்பு மாநாடு

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ள நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒருங்கிணைப்பு மாநாடு 02 ஜூன் 2024 அன்று சீதாவாக்க பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

ஜனாதிபதி பணிக்குழு பிரதானியும் ஜனாதிபதி சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க அவர்கள் இம் மாநாட்டுக்கு தலைமை தாங்கினார். இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, 14 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யுஎஸ்பீ, சீதாவக பிரதேச செயலகத்தின் செயலாளர், இராணுவ மற்றும் விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது, பிரதேசத்தைப் பாதிக்கும் பல முக்கியமான விடயங்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தினர். இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குதல், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் சேவைகளை மீட்டெடுப்பதை உறுதி செய்தல், ஆயுதப்படைகளுடன் இணைந்து பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து விரிவாக ஆலோசித்தனர். மேலும், நிலைமையின் அவசரம் மற்றும் தீவிரத்தன்மையை உணர்ந்து, சீதாவாக்க பிரதேச செயலக அலுவலகத்திற்கு அனர்த்த நிவாரண நடவடிக்கைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக யூனிகொன் வாகனங்களை வழங்க இராணுவத் தளபதி ஒப்புக்கொண்டார்.