01st June 2024 07:18:59 Hours
புதிதாக நிலை உயர்வு பெற்ற இலங்கை இராணுவ தொண்டர் படையணி பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் இராணுவ தளபதியின் அலுவலகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 31 மே 2024 அன்று சந்தித்து தனது அதிகார சின்னங்களைப் பெற்றுக்கொண்டதுடன் இராணுவத் தளபதியின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்தின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணித்து சேவையற்றி புதிய நிலைக்கு உயர்வு பெற்ற மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இவர் இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணி அதிகாரி ஆவார்.
ஒரு சுமூகமான உரையாடலுக்குப் பிறகு, இராணுவத் தளபதியினால் அவருக்கு இரண்டு நட்சத்திர ஜெனரலாக புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் அதிகார சின்னமாக வாள் வழங்கப்பட்டது. சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் அந்நாளின் நினைவாக படங்களையும் எடுத்துக்கொண்டார்.