26th May 2024 12:28:55 Hours
ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெசாக் பக்தி பாடல் – 2024 நிகழ்வின் மூன்றாம் நாள், 25 மே 2024 அன்று காலி முகத்திடல் வெசாக் வலயத்தில் நடத்தப்பட்டது.
இலங்கை ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஈஎம்எஸ்பி ஏக்கநாயக்க, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
இராணுவத் தளபதி மற்றும் அவரது துணைவியார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெசாக் வலயத்தில் விளக்குகளை ஒளிரசெய்ததுடன் நிகழ்வு ஆரம்பமானது. இராணுவப் படையினரால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் வெசாக் பக்தி பாடல் மற்றும் கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.
அதன் பின்னர், காலி முகத்திடல் வெசாக் வலயத்தில் உருவாக்கப்பட்ட வெசாக் பந்தலை இராணுவ தளபதி மற்றும் ஏனைய அழைப்பாளர்கள் ஒளி வைத்தனர். இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தினால் அனைத்து பக்தர்களுக்கும் உணவு தானம் வழங்கும் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.