Header

Sri Lanka Army

Defender of the Nation

25th May 2024 14:43:14 Hours

தியவன்னா வருடாந்த வெசாக் வலயம் – 2024 இல் இராணுவத் தளபதி

பாதுகாப்பு அமைச்சு, முப்படைகள் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட தியவன்னா வருடாந்த வெசாக் வலயம் 23 மே 2024 அன்று ஆரம்பமானது.

மதகுருமார்கள், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

அனைத்து கௌரவ அதிதிகளாலும் மங்கல விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வெசாக் விளக்குகளை ஏற்றி நிகழ்வை அடையாளமாக ஆரம்பித்து வைத்தார்.

டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியை உள்ளடக்கிய வெசாக் வலயமானது, இராணுவப் படைகளுடன் இணைந்து நிர்மாணிக்கப்பட்ட நிபுணத்துவ கைவினைத்திறனை வெளிப்படுத்தும் விசேடமாக தயாரிக்கப்பட்ட விளக்குகள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றன.

விழா ஆரம்பித்ததுடன் அனைத்து அழைப்பாளர்களும் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நடத்தப்பட்ட கலாசார நிகழ்வைக் கண்டுகளித்துடன் அதைத் தொடர்ந்து ஆயுதப்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட வெசாக் கூடுகளை பார்வையிட சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். நிகழ்வின் ஈர்ப்பை அதிகரிக்க ஆயுதப்படை வீரர்கள் பக்தி பாடல்கள் பாடினர்.

இந்நிகழ்ச்சியில் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.