24th May 2024 17:37:04 Hours
தேசிய வெசாக் விழாவின் வெசாக் தின நிகழ்ச்சி 2024 மே 23 அன்று (விசாக பெளர்ணமி தினம்) மாத்தளையில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ. விதுர விக்கிரமநாயக்க தலைமையில் ஆரம்பமானது.
மதகுருமார்கள், மத்திய மாகாண ஆளுநர் மாண்புமிகு. லலித் யு கமகே, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி ஜனகி லியனகே ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
ஆரம்பத்தில், வண. மாத்தளை தர்மராஜபிரிவென மகாநாயக்கர் கொஸ்கொல்லே சீலரதன மகா நாயக்க தேரர் வரவேற்புரை ஆற்றியதுடன் நிகழ்வின் நோக்கங்களை விவரிக்கும் சொற்பொழிவை வண.முகுனவெல அனுருத்த தேரர் நடத்தினார்.
தேசிய வெசாக் பண்டிகை 2024 ஐ ஒட்டி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் இணைந்து ஆறு விகாரைகளுக்கு 'பூஜை பூமி சான்னஸ உறுதிகளையும்' மேலும் ஐந்து விகாரைகளுக்கு 'நிதஹாஸ் தீமனா உறுதிகளையும் ' வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, தகுதியான குடும்பம் ஒன்றிக்காக இராணுவ சேவை வனிதையர் பிரிவின் ஒத்துழைப்புடன் 8 வது கஜபா படையணியினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு பாதுகாப்பு பதவி நிலை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியினால் கையளிக்கப்பட்டது.
பின்னர், கலல்பிட்டிய க்ஷேஷ்த்ராம விகாரையின் அறநெறி பாடசாலை மாணவர்கள், நிகழ்விற்கு வண்ணம் சேர்க்கும் பக்தி பாடல்களை வழங்கினர். தொடர்ந்து கௌரவ. லலித் யூ கமகே அங்கு உரையாற்றியதுடன், ஜனாதிபதியின் செய்தியை வாசித்தார். அதனைத் தொடர்ந்து புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் நன்றியுரை ஆற்றினார்.
இறுதியில், இந்நிகழ்வில் கலந்துகொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள், இராணுவத் தளபதிக்கு சில விசேட நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தனர்.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பீ அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.