24th May 2024 17:38:55 Hours
கொழும்பு ‘புத்தரஷ்மி’ வெசாக் வலயம் 2024 ஆனது, 23 மே 2024 அன்று மாலை கொழும்பு ‘ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் சீமாமலகாயவில் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
சிறப்புமிக்க மதகுருமார்கள், ஜனாதிபதியின் செயலாளர் திரு. ஈஎம்எஸ்பி ஏக்நாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழு பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜோன் அமரதுங்க, பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ,கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சி, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஷபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் விழாவில் பங்குபற்றினர்.
ஆரம்பத்தில், பிரதம அதிதியும், அழைப்பாளர்களும், ‘சீமாமலகாயா’வில் புத்த பெருமானுக்கு மலர் வழிபாடு செய்தனர். பின்னர் நாரஹஹென்பிட்டி அபயராம விகாரை' பிரதமகுரு வண. (கலாநிதி) முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் ஐந்து கட்டளைகளை ஓதினார். பின்னர், ஹுனுபிட்டிய கங்காரமா விகாரையின் பிரதமகுருவானவண. (கலாநிதி) கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் ‘புத்த ரஷ்மி’ வெசாக் வலயத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
உரையின் போது, வண. (கலாநிதி) கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், 'புத்தரஷ்மி' வெசாக் வலயத்திற்காக இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவத் படையினரின் பங்களிப்பு குறித்து விசேடமாக குறிப்பிட்டார். கடந்த ஆண்டு இராணுவத்தால் கட்டப்பட்ட ‘அபயா’ மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ‘வங்ககிரிய’ சிறப்பித்து குறிப்பிடப்பட்டது.
பின்னர், அதிமேதகு ஜனாதிபதி, வெளிச்ச கூடுகளை ஒளிர 'புத்தரஷ்மி' வெசாக் வலயம் 2024 னை திறந்து வைத்தார். அதன்பிறகு, அழைப்பாளர்கள் ஷங்ரிலா பசுமை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘அன்னதானம்’ மற்றும் வளாகத்தில் வெசாக் வலய அலங்காரங்களைத் தொடங்கி வைத்தார்கள்.
பின்னர், இராணுவத் தளபதி இராணுவதினரால் நிர்மாணிக்கப்பட்ட ‘வங்ககிரிய’வை பக்தர்களுக்காக திறந்து வைத்தார். இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஆம் ஆண்டுக்கான ‘புத்தரஷ்மி’ வெசாக் வலயத்திற்கு ‘வெஸ்ஸந்தர ராஜா மாளிகை’ (வெஸ்ஸந்தர மன்னரின் அரண்மனை) மற்றும் ‘வங்ககிரிய’ காடுகளின் கருப்பொருளின்படி பொறியியல் சேவைகள் படையணி படையினர் இதனை நிர்மாணித்தனர்.
பின்னர், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே மற்றும் ஏனையோர் அன்றைய நிகழ்ச்சியை நிறைவு செய்வதற்கு முன்னர் 'வங்ககிரிய' விற்கு விஜயம் செய்தனர்.