23rd May 2024 17:44:05 Hours
2024 மே 20 அன்று கொஸ்கம இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம் வெளியேறும் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்களுக்கு பிரியாவிடை அளித்தது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையக பிரதி தளபதியும் பயிற்சிப் பரிசோதகருமான பிரிகேடியர் டபிள்யூ.ஜி.பீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் படையினரின் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையினை அடுத்து நுழைவாயிலில் வரவேற்றார்.
மேலும்,அவர் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தனது பதவிக்காலத்தின் முடிவைக் குறிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தனது கையொப்பத்தை வைத்துடன் அவரது அலுவலகத்தில் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் வாழ்த்துக்களையும் பதிவிட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி அவரது அலுவலகத்தில் நினைவுப் பரிசாக அவரது உருவப்படத்தைத் திறந்து வைத்துடன் பணியாளர்களுடன் சில குழு படங்களையும் எடுத்துகொண்டார்.
படையினருக்கு உரையாற்றிய சிரேஷ்ட அதிகாரி, இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தில் தனது நினைவுகளை நினைவு கூர்ந்ததுடன் தனது பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட ஆதரவிற்காக படையினருக்கு நன்றி தெரிவித்தார்.மேலும், புதிதாக பதவி ஏற்க உள்ள அதிகாரிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரத்தின் போது அவர் படையினருடன் கலந்துரையாடினார்.
மாலை வேளையில், சப்பர்ஸ் லெஷர் பே, மத்தேகொடையில் பதவி விலகும் சிரேஷ்ட அதிகாரிக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியு அவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கியதுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவு பெற்றது. அந்த நிகழ்வுகளின் போது இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.