23rd May 2024 06:40:52 Hours
மியான்மருக்கான இலங்கைக்கான தூதுவர் கௌரவ பிரபாஷினி பொன்னம்பெரும, புதிய நியமனத்தை ஏற்றுக் கொள்வதற்காக மியான்மருக்குப் புறப்படுவதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 22 மே 2024 அன்று சந்தித்தார்.
2003 ஆம் ஆண்டு இலங்கை வெளிவிவகார சேவையில் இணைந்து கொண்ட வெளிநாட்டு சேவை அதிகாரி பிரபாஷினி பொன்னம்பெரும, மியன்மாருக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டு, விரைவில் கடமைகளை பொறுப்பேற்க தயாராக உள்ள நிலையில் அவர் 2021 முதல் 2023 வரை வெளிநாட்டு சொத்து முகாமை பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகமாக பதவி வகித்தார். அத்துடன் தற்போது கொழும்பு வெளிவிவகார அமைச்சின் ஆப்பிரிக்க விவகார பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
இந்த சந்திப்பின் போது, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் அவரின் நியமனத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், இலங்கைக்கும் மியான்மருக்கும் இடையில் நடைமுறையில் உள்ள இருதரப்பு பயிற்சி திட்டங்கள் மற்றும் பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடினார். இதன்போது நல்லெண்ணத்தை மேம்படுத்துதல் மற்றும் நட்பு ரீதியான ஒத்துழைப்பை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் இராணுவத் தளபதி வலியுறுத்தினார்.
நிகழ்வின் இறுதியில், மியன்மார் இலங்கைக்கான புதிய தூதுவருக்கு இராணுவ தளபதி நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.