23rd May 2024 06:44:25 Hours
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான புதிய தலைமையகம் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுரவில் 2024 மே 22 அன்று முப்படைகளின் சேனாதிபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி பணிக்குழுப் பிரதானியும் சிரேஷ்ட ஆலோசகருமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சீ, விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யுஎஸ்பீ ஆர்சீடிஎஸ் பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
முப்படை வீரர்களின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவையை பூர்த்தி செய்யும் வகையில், புதிய இரண்டு மாடி கட்டிடம் ஒரு மாநாட்டு மண்டபம், கிளப் ஹவுஸ், தங்கும் அறைகள், உணவறை மற்றும் அலுவலக வளாகம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இலங்கை கடற்படையின் படையினர் இதன் கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதிமேதகு ஜனாதிபதி, பதாகையை திரைநீக்கம் செய்து புதிய தலைமையக வளாகத்தினை திறந்து வைத்ததுடன் அழைப்பாளர்களுடன் வளாகத்தை சுற்றிப் பார்வையிட்டார்.
முன்னாள் படை வீரர் சங்கத் தலைவர் மேஜர் ஜெனரல் டபிள்யூஜிஎம்யுஆர் பெரேரா (ஓய்வு), அன்றைய தினத்திற்கான வரவேற்புரையை நிகழ்த்தினார்அத்துடன் இந்நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், அதிமேதகு ஜனாதிபதிக்கு விசேட நினைவுச் சின்னமும் வழங்கினார். சங்க பொதுச் செயலாளரின் நன்றி உரை மற்றும் குழு படம் எடுத்தலுடன் நிகழ்வு நிரைவடைந்தது.