Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd May 2024 18:18:04 Hours

இராணுவத் தலைமையகத்தில் வகிப்பங்கிக்கான கௌரவிப்பு

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 22 மே 2024 அன்று பரமவீரவிபூஷணய (பீடபிள்யூவீ) பதக்கம் பெற்றவர்களை நினைவுகூரும் வகையில் இராணுவத் தலைமையகத்தில் கௌரவிப்பு சுவரினை திறந்து வைத்தார்.

பீடபிள்யூவீ "உச்ச வீர அலங்காரம்", இலங்கையின் மிக உயர்ந்த இராணுவ கௌரவமாக உள்ளது. இது போரில் விதிவிலக்கான வீரத்தை வெளிப்படுத்திய இலங்கை இராணுவத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களை அங்கீகரித்து வழங்கப்படுகின்றது.

இந்த புதிய நிறுவல் ஆனது அசாதாரண நபர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் குறிக்கும் வகையிலும் அவர்களின் துணிச்சலையும் கடமைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் கௌரவிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.