Header

Sri Lanka Army

Defender of the Nation

20th May 2024 20:02:58 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்கள் இராணுவத் தளபதியை சந்திப்பு

15 வது தேசிய போர் தினத்திற்கு இணையாக நிலை உயர்வு பெற்ற இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிபிஎல் கொலோன்ன யுஎஸ்பீ மற்றும் மேஜர் ஜெனரல் டிசீ பீரிஸ் ஆர்எஸ்பீ, யுஎஸ்பீ ஆகியோர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 20 மே 2024 அன்று சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, இரண்டு சிரேஷ்ட அதிகாரிகளும் தமது அதிகாரச் சின்னங்களையும் வாழ்த்துக்களையும், இராணுவத் தளபதியிடமிருந்து பெற்றுக்கொண்டனர். வாழ்த்துக்களுக்குப் பின்னர், இராணுவத் தளபதி அவர்கள் ஒவ்வொரு சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் அவர்களின் புதிய அதிகாரத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஜெனரல் நிலைக்கான வாளினை வழங்கி வைத்தார்.

இராணுவத் தளபதிக்கு சிரேஷ்ட அதிகாரிகள் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன், நிகழ்வின் நினைவுகளைச் சேர்கும் வகையில் படங்கள் எடுத்துகொண்டதுடன் நிகழ்வு நிறைவுற்றது.