17th May 2024 17:51:18 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இன்று மே 16 காலை, இலங்கை இராணுவ முன்னோடிப் படையணியின் மறைந்த மேஜர் சிபி கொஹோன (ஓய்வு) அவர்களுக்கு கண்டி சுதுஹும்பொல வீதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
மறைந்த மேஜர் சிபி. கொஹொன (ஓய்வு) மாத்தளை விஜய கல்லூரியின் மாணவ சிப்பாய் குழுவின் பொறுப்பதிகாரியாக இருந்தவர். தளபதி தனது மாணவ சிப்பாய் குழு பொறுப்பாசிரியருக்கு அஞ்சலி செலுத்தியதோடு பாடசாலை காலங்களில் அவர் ஆற்றிய சேவைகளையும் நினைவு கூர்ந்தார்.
தனது விஜயத்தின் போது, இராணுவத் தளபதி மறைந்த போர்வீரரின் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் துயரத்தின் போது அவர்களுக்கு தனது இதயப்பூர்வமான அனுதாபங்களைத் தெரிவித்தார்.
மேஜர் சிபி. கொஹொன (ஓய்வு) அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (14 மே 2024) சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் காலமானார். அவர் 73 வயதில் தேசத்திற்கான வீர சேவையின் நினைவுகளை விட்டு காலமானார்.
மேஜர் சிபி கொஹொன (ஓய்வு) அவர்கள் 1983 மார்ச் 07 ஆம் திகதி பாடநெறி சிலோன் கெடட் கோ 1 பாடநெறி ஊடாக தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன்னாக இலங்கை இராணுவ முன்னோடி படையணியில் நியமிக்கப்பட்டார்.
அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன் தொடர்ந்து நிலை உயர்வுகளை பெற்ற அவர், மேஜர் நிலைக்கு உயர்த்தப்பட்டார். அவர் 18 ஜனவரி 2011 இல் இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.