Header

Sri Lanka Army

Defender of the Nation

16th May 2024 21:56:35 Hours

பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ், எச்ஐ (எம்) அவர்கள் வியாழக்கிழமை (16) இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் நட்பு ரீதியான கலந்துரையாடலின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீடித்த நல்லெண்ணப் பிணைப்பை அங்கீகரித்து, இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் ஆழமான புரிந்துணர்வை வளர்தல் தொடர்பான உரையாடலை மேற்கொண்டனர்.

மேலும், இலங்கை இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதற்கு அதிகமாக ஆதரவளித்த பாகிஸ்தானின் தாராளமான பங்களிப்புகளுக்கு இராணுவத் தளபதி நன்றி தெரிவித்துடன், இராணுவத் தளபதி அவர்கள் அவரின் புதிய நியமனத்திற்கு அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு முக்கியத்துவம் சேர்க்கும் வகையில், இலங்கைக்கு வருகை தந்த இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் உயர்ஸ்தானிகர், புறப்படுவதற்கு முன்னர் தளபதியின் அலுவலக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது பாராட்டுக்களை எண்ணங்களை பதிவிட்டார். அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டதுடன் சந்திப்பு நிறைவுற்றது.

இச்சந்திப்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முஹம்மது பாரூக் அவர்களும் கலந்து கொண்டார்.