Header

Sri Lanka Army

Defender of the Nation

09th May 2024 05:35:01 Hours

பதவி நிலை பிரதானி தேசிய வெசாக் விழா 2024க்கான பூர்வாங்க மாநாட்டில் பங்கேற்பு

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 2024 தேசிய வெசாக் விழா 2024 க்கான பூர்வாங்க மாநாட்டில் 07 மே 2024 அன்று மாத்தளை தர்மராஜ விகாரையில் கலந்து கொண்டார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிகழ்விற்கு தேவையான திட்டமிடல் தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித் யு கமகே கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். வழங்கல் ஆதரவை வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தல் மற்றும் விழாவின் சுமூகமான நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் செயலூக்கமான நடவடிக்கைகளை அமுல்படுத்துதல் போன்றவற்றில் இலங்கை இராணுவம் தனது ஒத்துழைப்பை வழங்கும்.

மாநாட்டில் மகா சங்கத்தினர், அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.