05th May 2024 09:42:26 Hours
மாத்தளை விஜய கல்லூரியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை (மே 03) பெர்னாட் அலுவிஹார மைதானத்தில் பிரமாண்டமாக இடம்பெற்றது. விஜய கல்லூரியின் பழைய மாணவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வின் ஆரம்பமாக வருகை தந்த இராணுவத் தளபதி விஜய கல்லூரியின் அதிபர் திரு.ராஜித தீக்ஷன மற்றும் சிரேஷ்ட மாணவ தலைவர் ஆகியோரால் வரவேற்கப்பட்டு, கீழைத்தேய பேண்ட குழுவினரின் இசையுடன் மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
பல தடகள நிகழ்வுகள் விளையாட்டு போட்டியை உற்சாகப்படுத்தியதுடன், இசைக்குழுவினரின் இசை நிகழ்விற்கு வண்ணம் சேர்த்தது. இந்நிகழ்வில், விஜய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின கொழும்பு கிளை உப தலைவர் பிரிகேடியர் எஸ்.எம்.டபிள்யூ.பி.என் தலகஹவத்த (ஓய்வு) அவர்கள் புதிதாக வடிவமைக்கப்பட்ட கல்லூரியின் கார் சின்னத்தை இராணுவத் தளபதிக்கு வழங்கி வைத்தார்.
அன்றைய நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் இராணுவத் தளபதிக்கு வர்ணமயமான அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். நிகழ்வில் உரையாற்றிய அன்றைய பிரதம அதிதி, தனது பாடசாலை வாழ்க்கையின் நினைவுகளை நினைவு கூர்ந்ததோடு, மாணவர்கள் கல்வியை வெற்றிகரமாக தொடர்வதுடன் விளையாட்டு மற்றும் இணைப்பாட செயற்பாடுகளில் கவனம் செலுத்துமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
நிறைவு விழாவின் போது, இராணுவத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பிற அழைப்பாளர்களுடன் இணைந்து வருடாந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
விளையாட்டுப் போட்டியின் பின்னர், சிறிது நேரம் விடுமுறை எடுத்துக்கொண்டு பாடசாலைக்கு வருகை தந்த இராணுவத் தளபதி கல்லூரியின் மேலைத்தேய பேண்ட குழுவினருக்கு இசைக்கருவிகளை வழங்கியதுடன் அன்றைய விஜயத்தை நிறைவு செய்தார்.
கல்லூரியின் பழைய மாணவர்களான முன்னாள் தூதுவர் திரு. டி.எம்.எம்.ரணராஜா, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான கேணல் எம்.பி.பி.என் ஹேரத் ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.