27th April 2024 12:33:12 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் வெள்ளிக்கிழமை (26 ஏப்ரல் 2024) அன்று இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்ட காலி புனித அலோசியஸ் கல்லூரி கோல்டன் லில்லி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை காலி புனித அலோசியஸ் கல்லூரியின் அதிபர் திரு.புபுது சம்பத் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்து வரவேற்றதுடன், பாடசாலையின் கீழைத்தேய பேண்ட் குழுவினரால் பிரதான நுழைவாயிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டார்.
பின்னர், தேசிய மாணவ சிப்பாய்களால் இராணுவத் தளபதிக்கு அணிநடை மரியாதை வழங்கப்பட்டது, அதைத் தொடர்ந்து இராணுவத் தளபதி புனித அலோசியஸ் கல்லூரி போர்வீரர் நினைவுத்தூபியில் மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவர் மேலைத்தேய பேண்ட் குழுவினரால் கோல்டன் லில்லி கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதன்போது, இராணுவத் தளபதி பதாகையை திரைநீக்கம் செய்ததுடன், பார்வையாளர்களுடன் வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
கோல்டன் லில்லி கட்டிடம் நீண்ட காலமாக பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்ட 4 மாடி கட்டிடமாகும். அதிபர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க இராணுவத் இராணுவத் தளபதி, அவரது தந்தை லெப்டினன் ஹெட்டிகொட லியனகே சுகதபால (ஓய்வு) அவர்களின் நினைவாக கட்டிடத்தை புனரமைக்கும் பொறுப்பை 4 வது பொறியியல் சேவைகள் படையணியின் படையினருக்கு பொறுப்பை வழங்கினார். மேஜர் ஜெனரல் டி.ஜே கொடித்துவக்கு (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் மேஜர் ஜெனரல் கேஎம்எஸ் குமார (ஓய்வு) ஆகியோர் இத்திட்டத்திற்கு தேவையான ஒருங்கிணைப்பை வழங்கினர்.
புதிதாக புனரமைக்கப்பட்ட இக்கட்டிடம் நவீன தொழிநுட்ப வகுப்பறை, மனைப் பொருளியல் அறை, விளையாட்டுப் பிரிவு, 02 தகவல் தொழில்நுட்ப கூடங்கள், 06 வகுப்பறைகள் மற்றும் கிழைத்தேய இசை மற்றும் நடன அறை ஆகியவற்றை உள்ளடக்கியது.
அன்றைய நிகழ்வுகளை ஆரம்பிக்கும் வகையில், கல்லூரி கீதம் இசைக்கப்பட்டதுடன், அதிபர் வரவேற்புரை வழங்கினார். பின்னர், பாடசாலையின் சிறு ஆவணக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டது. அதேவேளை, இரு தரப்பினருக்கும் இடையிலான நல்லுறவை உணர்த்தும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அதன்படி இராணுவத் தளபதி தனது தந்தையின் பெயர் அடங்கிய "தி அலோசியன் ஜர்னல்" (1943-1946) நகலைப் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது, இக்கல்லூரியின் மாணவரான அதிகாரவாணையற்ற அதிகாரி 1 கே டி கல்ஹார தேசிய மாணவச் சிப்பாய் படையணியின் முதலாம் படையலகின் ரெஜிமெண்ட் சாஜன் மேஜர் நியமனத்தை பெற்றுக் கொண்டுள்ளமையை கௌரவிக்கும் விதமாகவும் அகில இலங்கை குறிபார்த்துச் சுடும் சங்கத்தினால் தென் மாகாண மாணவர்களிடையே நடாத்தப்பட்ட குறிபார்த்துச் சுடும் போட்டியில் சிறந்த குறுபார்த்து சுடும் வீரராக தெரிவு செய்யப்பட்ட லான்ஸ் கோப்ரல் எம்.டி.ஐ.எச்.சதருவானை பாராட்டும் விதமாகவும் இருவருக்கும் இராணுவத் தளபதி பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
பல்வேறு அழகியல் நிகழ்வுகள் விழாவிற்கு கவர்ச்சியையும் வண்ணத்தையும் சேர்த்தன மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் பாடசாலை சார்பாக நன்றியுரை வழங்கினார். நிறைவுக்கு முன்னதாக, இராணுவத் தளபதி தனது கருத்துக்களை பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, சேவையாற்றும் மற்றும் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.