Header

Sri Lanka Army

Defender of the Nation

19th April 2024 13:04:08 Hours

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இராணுவ தலைமையகத்தில் தேநீர் விருந்து

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் வியாழக்கிழமை (ஏப்ரல் 18) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

நிகழ்விடத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ , பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பி.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சீஎல்சீ மற்றும் பதவி நிலை பிரதானிகள் வரவேற்றனர்.

புத்தாண்டு நிகழ்வின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் பிரதம அதிதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் மங்கல விளக்கேற்றி புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

சம்பிரதாயத்தின் தேநீர் மேஜை பல வகையான பாரம்பரிய இனிப்புகள் மற்றும் பாற்சோறுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது. லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பங்கேற்பாளர்களுடன் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.