Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2024 20:00:00 Hours

புத்தாண்டு அனைவருக்கும் செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் அமைதியை வழங்கட்டும்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் தனது சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் இராணுவத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செழிப்புமிக்க புத்தாண்டாக அமைய வாழ்த்துக்களை தெரிவிக்கின்றார்!

அவரது முழு புத்தாண்டு செய்தி இங்கே:

இராணுவத் தளபதியின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி

முதலாவதாக சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு 2024 யை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சூரியன் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சஞ்சரிக்கும் தருணத்தில் தொடங்கும் புத்தாண்டு, நித்திய மரபுகளுக்கு முன்னுரிமை அளித்து சிங்கள, தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு கலாசார விழாவாகும். பாரம்பரிய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பாதுகாக்கும் அதே வேளை, பிள்ளைகள் மற்றும் பெரியவர்கள் புதிய உத்வேகத்தையும் அனுபவத்தையும் பெற இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். குறிப்பாக சுப சம்பிரதாயங்கள் மற்றும் சமய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து இனங்களையும் சேர்ந்த இலங்கையர்களை ஒரு நோக்கத்திற்காக ஒன்றிணைக்கும் இலங்கையின் திறனை இது பிரதிபலிக்கிறது.

கடந்த வருடம் இலங்கை இராணுவத்தின் வீரர்களுக்கும், முழு இலங்கை மக்களுக்கும் சவாலான ஆண்டாக அமைந்தது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இராணுவத் தளபதி என்ற முறையில், அந்தக் கடினமான காலகட்டத்தின் அனைத்து கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு தொழில்முறை மற்றும் ஒழுக்கமான போர்வீரர்களாக நீங்கள் அனைவரும் ஆற்றிய பங்கிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். மான்புமிகு ஜனாதிபதி அவர்களின் தொலைநோக்குப் பார்வையின்படி, பாதுகாப்புப் படையினர் மற்றும் முழு நாட்டுப் பிரஜைகளின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பின் அடிப்படையில் எமது நாடு தற்போது ஸ்திரமான நிலையில் உள்ளது என்றே கூற வேண்டும். இந்த ஆண்டு புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு அந்தத் தரப்பினரின் தியாகம் மற்றும் ஆர்வத்தின் விளைவாகும் என்பதையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

வளமான தேசத்திற்கு பங்களிக்கும் கடமையில் இராணுவம் உறுதியாக உள்ளது. தேசத்திற்கும் உலகிற்கும் முன்னுதாரணமாகத் திகழும் உங்களின் ஒழுக்கமும் தொழில்முறையும் பாராட்டுக்குரியது. தொடர்ச்சியான பயிற்சியும் பெருமைமிக்க மனப்பான்மையும் நமது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகும். இராணுவத் தளபதி என்ற முறையில், மிகவும் திறமையான மற்றும் தொழில்முறை வீரர்களை வளர்ப்பதே எனது குறிக்கோள்.

இலங்கை இராணுவம் எதிர்கொண்ட சகல சவால்களிலும் வெற்றிபெற்றுள்ளது என்பதை ஒப்புக்கொள்வது மிகவும் முக்கியமானதுடன் இது எதிர்வரும் காலங்களில் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடனும் ஒத்துழைப்புடனும் எமது கடமைகளைத் தொடர்வதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. எமது இறையான்மை மற்றும் பிரதேச ஒருமைப்பாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை முறியடித்து எமது தாய்நாட்டைப் பாதுகாப்பது இலங்கை இராணுவத்தின் முதன்மையான கடமையாகும். எனவே, நமது மதிப்பிற்குரிய இராணுவத்தின் பெருமைமிக்க உறுப்பினர்களாக நாம் பெற்றுள்ள கௌரவத்தையும் மதிப்பையும் நிலைநிறுத்துவதில் நாம் தொடர்ந்து நிலைத்திருப்பது அவசியம்.

சமீப காலங்களில், இராணுவத்தின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் நமது உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன்களை உறுதி செய்வதற்காக கட்டமைப்பு சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இராணுவ முகாம்கள், கள தலைமையகம், படையணி தலைமையகங்கள், படையலகுகள் மற்றும் பயிற்சிப் பாடசாலைகள் உட்பட முழுவதில் உள்ள உற்கட்டமைப்பு மேம்பாடுகள், நமது வீரர்களின் கண்ணியத்தை நிலைநிறுத்துவதுடன், உகந்த பணிச்சூழலை வழங்குவதற்கான நமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

எமது அரசின் வீரம் மிக்க பாதுகாவலர்களாக விளங்கும் இலங்கை இராணுவத்தின் நற்பெயரையும் கௌரவத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு எம் அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அத்தியாயத்தை நாம் ஒன்றாக ஆரம்பிக்கும் போது அனைத்து இராணுவ சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு எனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்மணிகளின் ஆசிகள் உங்களுக்கு கிட்டட்டும்!

எச்எல்விஎம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ
லெப்டினன் ஜெனரல்
இராணுவத் தளபதி