Header

Sri Lanka Army

Defender of the Nation

11th April 2024 15:42:04 Hours

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் ‘அபிமன்சல 3’ க்கு போர் வீரர்களை பார்வையிடுவதற்கு இராணுவ தளபதி விஜயம்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே அவர்களுடன் போர்வீர்ர்களை பார்வையிட்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு - 2024க்கான புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்காக புதன்கிழமை (10 ஏப்ரல் 2024) அபிமன்சல – 3 நல விடுதிக்கு விஜயம் செய்தார்.

வருகை தந்த பிரதம விருந்தினருக்கு இராணுவ சம்பிரதாயங்களின்படி நுழைவாயில் வாகன தொடரணி மரியாதை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கு வசிக்கும் போர் வீரர் ஒருவர் இராணுவ தளபதியினை வரவேற்றார்.

தொடர்ந்து இராணுவத் தளபதி, கூட்டத்தினருடன், வளாகத்தில் உள்ள அறைகள், பண்ணை, நீர் சிகிச்சை பிரிவு, ஆயுர்வேத மையம், செயற்கை மற்றும் எலும்பு முறிவு பட்டறை, மருத்துவமனை மற்றும் பிற வசதிகளை பார்வையிட்டார்.

பின்னர் நலவாழ்வு விடுதியின் தளபதி பிரிகேடியர் பீ.கே.ஜி.சி பாஸ்குவேல் வரவேற்புரையாற்றினார். பின்னர், அனைவரும் போர் வீர்ர்களுடன் மதிய உணவில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து இராணுவத் தளபதியும், இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியும் இணைந்து அங்கு வசிப்பவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கினர்.

இராணுவத் தளபதி தனது உரையின் போது, இன்னும் சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் புதிய நம்பிக்கைகள், அமைதி, மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் ஆரோக்கியம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், தேசத்திற்கு ஆற்றிய சேவைக்காக போர் வீரர்களை மிகவும் பாராட்டியதுடன், விரைவில் குணமடைய பிரார்த்தித்தார்.

பின்னர், அன்றைய வருகையைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களின் பரிமாற்றம் நடைபெற்றதுடன் மேலும் அங்குள்ள போர்வீரர்களால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள் மற்றும் ஓவியங்களை அனைவரும் பார்வையிட்டனர்.

புறப்படுவதற்கு முன், அழைப்பாளர்கள் குழு படத்தினை பெற்றுக்கொண்டதுடன் மேலும் இராணுவ தளபதி விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார். இராணுவ வளங்கல் தளபதி மேஜர் ஜெனரல் எம்டப்ளியூடீசி மெத்தானந்த யூஎஸ்பீ என்டிசி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.