Header

Sri Lanka Army

Defender of the Nation

06th April 2024 15:40:40 Hours

பாரம்பரிய நிகழ்வுகளுடன் இராணுவத் தலைமையக புத்தாண்டு கொண்டாட்டம்

இராணுவத் தலைமையகம் 2024 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவை பாரம்பரிய நிகழ்வுகளுடன் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 05) பனாகொடை இராணுவ வளாகத்தில் பெரும் திரளானேரின் பங்கேற்புடன் நடாத்தியது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதைர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

இராணுவத் தளபதி மற்றும் ஏனைய அழைப்பாளர்கள், வடிவமைக்கப்பட்ட பாரம்பரிய இல்லத்தில் ('வலவ்வ') மங்கல விளக்கு ஏற்றி வளாகத்தில் வடிவமைக்கப்பட்டிருந்த இடங்களைப் பார்வையிட்டனர். மேலும் பாரம்பரிய அழகியல் நிகழ்வுகள் விழாவிற்கு வண்ணம் சேர்த்தன.

ஓலை நெய்தல், பணிஸ் சாப்பிடுதல், தலையணை சண்டை, ரபான் அடித்தல், சறுக்கு மரம் ஏறுதல், புத்தாண்டு அழகு ராணி 'அவுருது குமரி' தேர்வு, யானைக்கு கண் வைத்தல், சமநிலை ஓட்டம், மெதுவான சைக்கிள் ஓட்டம், கயிறு இழுத்தல், வினோத உடை நிகழ்ச்சி மேலும் பல பாரம்பரிய மற்றும் வேடிக்கையான விளையாட்டுகள் இந்த விழாவில் நடைபெற்றன.

இறுதியில், இராணுவத் தளபதி மற்றும் பிரதம விருந்தினர்களால் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டது. அதன் பின்னர், இராணுவத் தளபதி தனது உரையின் போது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் மகிழ்ச்சியான மற்றும் வளமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிததுடன், நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்த அனைவரையும் பாராட்டினார். பொழுதுபோக்கான இசை நிகழ்ச்சியுடன் அன்றைய நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்.பீ.ஏ.ஐ.எம்.பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, முதன்மைப் பணிநிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.