Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd April 2024 09:32:27 Hours

விஜயபா மோட்டோ குரோஸ் - 2024 கிரண்ட் ஸ்கேலில் நடைபெற்றது

விஜயபாகு காலாட் படையணி, இலங்கை ஓட்ட பந்தய சங்கத்துடன் இணைந்து 31 மார்ச் 2024 அன்று குருநாகல், போயாகனேவில் விஜயபா மோட்டோ குரோஸ் 2024 யை நடாத்தியது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ மற்றும் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவத் தளபதியை விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.பி. அலுவிஹார ஆர்டபிளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். நிகழ்வின் போது, முப்படை வீரர்கள், பொதுமக்கள் மற்றும் இளம் ஓட்டுனர்கள் உட்பட 80க்கும் மேற்பட்டவர்கள் 14 பந்தய நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

முதல் முறையாக, மோட்டோ குரோஸில் இரண்டு அனைத்து நில வாகனங்களுக்கான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இறுதியில், பரிசளிப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அழைப்பாளர்களுடன் கலந்து கொண்டனர்.

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே. ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான பார்வையாளர்கள் நிகழ்வைக் கண்டுகளித்தனர்.

விஜயபாகு மோட்டோ குரோஸ் - 2024 இன் முடிவுகள் பின்வருமாறு:

இராணுவக் தளபதி கிண்ணம் – லான்ஸ் கோப்ரல் எடபிள்யூஎல்ஜே குமாரசிங்க இலங்கை இராணுவ சேவை படையணி

அதி வேக ஓட்டுனர் சாம்பியன் - ஜக் குணவர்தன

ஆண்டின் வளர்ந்து வரும் ஓட்டுனர் - சண்டேவ் அமரசிங்க

நீளமான தாண்டலுக்கான கிண்ணம் - டி.எம்.டி. கல்ஹார