Header

Sri Lanka Army

Defender of the Nation

27th March 2024 15:02:05 Hours

ஓய்வுபெறும் காலாட் பணிப்பக நாயகம் இராணுவ தளபதியை சந்திப்பு

காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதிமான கஜபா படையணியின் மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.ஏ. பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 35 ஆண்டுகளுக்கும் மேலான பணிக்குப் பின் ஓய்வு பெறுவதற்கு முன் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை 26 மார்ச் 2024 அன்று அவரது மனைவியுடன் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் அர்ப்பணிப்பான சேவை மற்றும் பல்வேறு சவால்கள் நிறைந்த பொறுப்புகளுடன் தவறாத அர்ப்பணிப்பு மற்றும் தன்னலமற்ற செயற்பாடுகளுக்கு தனது பாராட்டினை தெரிவித்துக்கொண்டார். மே 2009 க்கு முன்னர் பயங்கரவாதத்திற்கு எதிரான இறுதி போரின் போது ஓய்வு பெற்றவரின் விலைமதிப்பற்ற தியாகங்கள் மற்றும் கடமைகளை நினைவு கூர்ந்தார், அத்துடன் போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் அவர் தனது கடமைகளை திறம்பட நிறைவேற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

பதிலுக்கு, மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.ஏ. பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் இராணுவத் தளபதியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்ததுடன், பல்வேறு கடமைகளைச் செய்வதில் அவருக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

தனது பணிக்காலம் முழுவதிலும், குறிப்பாக சவாலான காலகட்டங்களில், நாட்டை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்பத்தினர் வழங்கிய விலைமதிப்பற்ற ஆதரவையும் இராணுவத் தளபதி பாராட்டினார்.

சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே, ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு மற்றும் பாராட்டுக்கான அடையாளமாக சிறப்பு நினைவுச் சின்னம் மற்றும் அவரது பாரியாருக்கு சிறப்புப் பரிசும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் கே.பீ.எஸ்.ஏ. பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 20 ஜனவரி 1989 இல் இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாடநெறி 31 இல் தியத்தலாவ மற்றும் இந்திய இராணுவ கல்வியற் கல்லூரியில் இராணுவ பயிற்சியை முடித்த பின்னர், அவர் 05 ஒக்டோபர் 1990 இல் இரண்டாம் லெப்டினன்னாக கஜபா படையணியில் நியமிக்கப்பட்டார். அவரது வாழ்க்கை முழுவதும், அவர் பல்வேறு நியமனங்களை வகித்ததுடன் அவர் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்டார், இறுதியில் 10 ஒக்டோபர் 2021 அன்று மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்தப்பட்டார்.

அவர் ஓய்வுபெறும் போது காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடைப் படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகித்தார். 6 வது கஜபா படையணியின் குழு தளபதி, இராணுவ பயிற்சி பாடசாலையின் அதிகாரி கட்டளை, 6 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் பயிலிளவல் அதிகாரி பயிற்சிப் பிரிவின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், 16 வது கஜபா படையணியின் கட்டளைத் அதிகாரி, 3 வது கஜபா படையணியின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), இராணுவ தலைமையகத்தில் உபகரண மாஸ்டர் ஜெனரல் கிளையின் பணி நிலை அதிகாரி 2, கஜபா படையணியின் நிறைவேற்று அதிகாரி, பணிநிலை அதிகாரி 2 (செயல்பாடுகள்/பயிற்சி), 3 வது கஜபா படையணி மற்றும் 16 வது கஜபா படையணியின் பதில் கட்டளை அதிகாரி, 3 வது மற்றும் 23 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி, லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் இலங்கைப் படையின் குழு தளபதி, சோகம் 2013க்கான பணிக்குழு செயலகத்தின் பணி நிலை அதிகாரி, 24 வது காலாட் படைப்பிரிவு, பாதுகாப்புப் படைத் தலைமையகம் (தெற்கு) மற்றும் பாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு), ஆகியவற்றின் கேணல் பொதுப் பணி, 533 காலாட் பிரிகேட் மற்றும் 643 காலாட் பிரிகேட்டின் பதில் தளபதி, இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனம் மற்றும் 52 வது காலாட் படைப்பிரிவு மற்றும் 53 காலாட் படைப்பிரிவின் தளபதி போன்ற நியமனங்களையும் அவர் வகித்துள்ளார்.

போர்க்களத்தின் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூரபதக்கம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

அவர் தனது இராணுவ வாழ்க்கையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை முடித்துள்ளார். சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் மனித உரிமைகள் பயிற்சி, இளம் அதிகாரிகளின் காலாட் படை பாடநெறி - பாகிஸ்தான், மத்திய தொழிலாண்மை பாடநெறி - பாகிஸ்தான், காலாட்படை கெப்டன் தொழிலாண்மை பாடநெறி - அமெரிக்கா மற்றும் சிரேஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா போன்றவற்றையும் பயின்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, இந்தியாவில் உள்ள தேவி அஹில்யா விஸ்வ வித்யாலயத்தில் சிரேஷ்ட நிலை பாதுகாப்பு முகாமை பாடநெறி, போர்ட் பென்னிங், கொலம்பஸ், ஜார்ஜியா, அமெரிக்காவில் அமைதிக்கான டிப்ளோமா பாடநெறி, இலங்கையில் மனித உரிமைகள் நிறுவனத்தில் மனித உரிமைகள் பாடநெறி, பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தில் இராஜதந்திர மற்றும் உலக விவகாரங்கள் பாடநெறி மற்றும் இந்தோனேசியா குடியரசின் தேசிய நெகிழ்வு நிறுவனத்தில் மூலோபாய மற்றும் மீள்நிலை பாடநெறி போன்றவற்ற இராணுவம் அல்லாத பாடநெறிகளையும் பயின்றுள்ளார்.