Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2024 18:04:10 Hours

இராணுவ பதவி நிலை பிரதானி ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் கண்டி இராணுவ தள வைத்தியசாலைக்கு விஜயம்

இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் 20 மார்ச் 2024 அன்று கண்டி ‘ஸ்ரீ தலதா மாளிகைக்கு’ விஜயம் செய்தார்.

அவரின் வருகையை ஸ்ரீ தலதா மாளிகையின் பிரதம நிர்வாகி திரு. பிரதீப் நீலங்கதீல அவர்களால் வரவேற்கப்பட்டார். பின்னர், பிரதம நிர்வாகி சிரேஷ்ட அதிகாரியை ஸ்ரீ தலதா மாளிகையின் கீழ் மற்றும் மேல் சந்நிதிகள் வழியாக அழைத்துச் சென்றார், அதன் பின்னர் சம்பிரதாயத்திற்கு அமைய ஆசிர்வாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் பிரதம நிர்வாகி ஆகியோர்களுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.

ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற வழிபாடுகளைத் தொடர்ந்து, சிரேஷ்ட அதிகாரி இலங்கை கலாசாரத்தில் ஆழமான முக்கியத்துவத்தை கொண்ட பழங்கால மரபுகளை கடைபிடிக்கும் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகா நாயக்க தேரர்களான வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகாநாயக்க தேரர் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

அதன் பின்னர், விரைவில் திறப்பு விழா காணவுள்ள கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகம் மற்றும் வழங்கல் தேவைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். முகாமைத்துவம் மற்றும் பராமரிப்பு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ.டபிள்யூ.எம்.பீ.டபிள்யூ.டபிள்யூ.பி.ஆர் பாலமகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ மற்றும் கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி ஆகியோர் பிரதம அதிதியை வரவேற்றனர். அச்சந்தர்ப்பத்தில் இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம், 11 வது காலாட் படைப்பிரிவு தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பிரசன்னமாகி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் கட்டளை அதிகாரி ஆகியோரினால் கண்டி இராணுவத் தள வைத்தியசாலையின் தற்போதைய செயற்பாடுகள், நிர்வாகம் மற்றும் வழங்கல் தேவைகள் பற்றிய விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

விடுதிகள், சத்திரசிகிச்சை நிலையம், பல் மருத்து பிரிவு, சமையலறை மற்றும் சிப்பாய்களின் தங்குமிடம் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.