Header

Sri Lanka Army

Defender of the Nation

21st March 2024 19:25:32 Hours

புதிய பொலிஸ் மா அதிபர் இராணுவத் தளபதியை சந்திப்பு

அண்மையில் நியமிக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் திரு. தேசபந்து தென்னகோன் அவர்கள் இன்று (மார்ச் 21) பிற்பகல் இராணுவத் தலைமையகத்தில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தார்.

வருகையின் போது, இராணுவ சம்பிரதாய மரியாதைகளுடன் வரவேற்கப்பட்ட பொலிஸ் மா அதிபருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இலங்கை பொறியியல் படையணி படையினரால் மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் வருகை தந்த பொலிஸ் மா அதிபரை அன்புடன் வரவேற்றதை தொடர்ந்து இராணுவத்தின் அனைத்து பிரதம பணிநிலை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளை அறிமுகம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பொலிஸ் மா அதிபர் குழு படம் எடுத்து கொண்டார்.

இதனையடுத்து, லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தளபதி அலுவலகத்தில் சம்பிரதாயமான சந்திப்பொன்றை முன்னெடுத்ததுடன், இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கிடையிலான பல்வேறு கடமைகள் மற்றும் பொறுப்புக்களின் ஒத்துழைப்பு தொடர்பாக இருவரும் நினைவு கூர்ந்தனர். இந்த கலந்துரையாடலில் பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எச்.கே.எஸ். பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களும் கலந்து கொண்டார்.

சந்திப்பின் முடிவில், அன்றைய நிகழ்வுகளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்ட பொலிஸ் மா அதிபர் வெளியேறும் முன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.