Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2024 15:01:40 Hours

பொறியியல் படைப்பிரிவின் தளபதி களப்பொறியியல் பிரிகேடிற்கு விஜயம்

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் 14 மார்ச் 2024 அன்று வவுனியா பூ ஓயாவில் அமைந்துள்ள களப்பொறியியல் பிரிகேட் மற்றும் 8 வது களப் பொறியியல் படையணிக்கு விஜயம் செய்தார்.

களப் பொறியியல் பிரிகேட் தளபதி கேணல் எப் ஜோசப் யூஸ்பீ அவர்கள் தளபதியை அன்புடன் வரவேற்றார். பொறியியல் பிரிகேடின் தளபதி மற்றும் பணிநிலை அதிகாரிகள் பின்னர் நிறுவன கட்டமைப்பு, பலம், களம் மற்றும் ஆலை பொறியியலாளர் பணிகள், கண்ணிவெடி அகற்றும் முன்னேற்றம் மற்றும் படையணியின் வழங்கல் விடயங்களை உள்ளடக்கிய விரிவான விளக்கமொன்றை முன்வைத்தனர்.

தளபதி இந்த விஜயத்தின் நினைவாக மாங்கன்று நாட்டினார். அதனை தொடர்ந்து தளபதி படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் பங்கு மற்றும் பணிகளைச் செய்யும்போது அவர்களின் பொறுப்புகளை வலியுறுத்தினார். 164 பணிமனை முற்றம், ஆலை இயந்திர முற்றம் மற்றும் கே9 பிரிவு ஆகியவற்றின் ஆய்வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

இந்த விஜயத்தின் போது சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் உடனிருந்தனர்.