Header

Sri Lanka Army

Defender of the Nation

14th March 2024 16:19:44 Hours

இராணுவ போர் கல்லூரி மாணவ அதிகாரிகள் இராணுவ தலைமையகத்திற்கு விஜயம்

புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 10 இன் மாணவர் அதிகாரிகள் புதன்கிழமை (மார்ச் 13) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அவர்களது பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக விஜயம் செய்தனர்.

இராணுவத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் பணிப்பகங்களின் கடமைகள் தொடர்பான அடிப்படை அறிவைப் பெறுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.

சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 10 இல் இராணுவத்தில் உள்ள பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி 29 மாணவர் அதிகாரிகள் பாடநெறியினை பின்பற்றுகின்றனர். இராணுவ போர் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவ போர் கல்லூரியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கேணல் எம்டிஎஸ்என் கருணாரத்ன பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட பணி நிலை அதிகாரிகள் இந்த விஜயத்தில் அதிகாரிகளுடன் கலந்துகொண்டனர்.

இந்த குழுவினர் இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்தவுடன் காலாட் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களால் வரவேற்கப்பட்டனர். அதே நேரத்தில், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ மற்றும் இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மாணவ அதிகாரிகள் மற்றும் உடன் வந்த அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டனர்.

பின்னர், பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பீகேஎஸ் நந்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கேள்வி பதில் அமர்வு தொடங்குவதற்கு முன்பு 'ஒரு சமகால படையலகின் கட்டளை அதிகாரியின் பங்கு' என்ற தலைப்பில் விரிவுரை வழங்கினார்.

சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி 10 வது குழு நடவடிக்கைகள் பணிப்பகம், ஊடக மற்றும் உளவியல் செயற்பாட்டு பணிப்பகம் ஆகியவற்றை பார்வையிட்டனர். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பணிப்பகத்தின் பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்த விஜயத்தின் போது பிரதம பதவி நிலை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.