Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd March 2024 16:43:54 Hours

லெபனான் ஐநா இடைக்காலப் 15 வது படைக்குழு பணிக்காக வெளியேறும் முன் இராணுவ தளபதியினை சந்திப்பு

லெபனான் ஐநா இடைக்காலப் படைத் தலைமையகத்தின் அமைதி காக்கும் பணிகளுக்காக நாட்டை விட்டுச் செல்லவுள்ள இலங்கை இராணுவத்தின் 15வது படை குழு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயத்திற்கு அமைய போயகனே விஜயபாகு காலாட் படையணி அணிநடை மைதானத்தில் மரியாதை செலுத்தியது.

அன்றைய பிரதம அதிதியான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து நுழைவாயிலில் விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரதம அதிதி சம்பிரதாய அணிவகுப்பை மதிப்பாய்வு செய்தார்.

லெபனான் ஐ.நா. இடைக்காலப் படைத் தலைமையகத்தின் ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு அடையாள முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில் இராணுவ தளபதியால் தேசியக் கொடி, ஐ.நா. கொடி, இராணுவக் கொடி மற்றும் விஜயபாகு காலாட் படையணி கொடி என்பன 15 வது படை குழுவின் கட்டளை அதிகாரியிடம் வழங்கப்பட்டன.

படைக் குழு கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிகேடி விதானகே ஆர்எஸ்பீ மற்றும் இரண்டாம் கட்டளை அதிகாரி மேஜர் எச்எம்டப்ளியூசி பண்டார யூஎஸ்பீ ,11 அதிகாரிகள் மற்றும் பல்வேறு இராணுவப் படையணிகளை சேர்ந்த 114 சிப்பாய்கள் என 125 இராணுவ வீரர்கள் பணிக்காக பயணிக்கவுள்ளனர்.

இராணுவத் தளபதி, சம்பிரதாய அணிவகுப்புக்குப் பின்னர், படையினருக்கு உரையாற்றியதுடன், நாட்டிற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வெளிநாட்டு பணியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இராணுவத் தளபதி தனது உரையின் போது ஐக்கிய நாடுகள் பணியின் முக்கியத்துவத்தையும், ஐநா அமைதி காக்கும் படையில் உள்ள இலங்கைக் குழு எவ்வாறு ஒரு முக்கிய சக்தியாக மாறியுள்ளது என்பதையும் எடுத்துறைத்தார். உரையின் பின்னர், இராணுவத் தளபதி படையினர்களுடன் நெருக்கமாக உரையாடியதுடன் அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துக்கு முன் 15வது படை குழுவுடன் குழுப் படம் எடுத்துக்கொண்டார்.

தொடர்ந்து, மேஜர் ஜெனரல் எஸ்ஆர்பி அலுவிஹார ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியை திறந்து வைக்க இராணுவத் தளபதியை அழைத்ததுடன் விஜயபாகு காலாட் படையணி தலைமையகத்தில் இராணுவ தளபதி படையினருக்கு உரையாற்றினார்.

நிகழ்ச்சிகளின் முடிவில், தளபதி விஜயபாகு காலாட் படையணி அதிதிகள் பதிவேட்டில் சில பாராட்டு குறிப்புகளை பதிவிட்டதன் பின்னர், விஜயபாகு காலாட் படையணியின் படைத் தளபதி இராணுவத் தளபதிக்கு சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவினர் 15வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவினரிடம் 17 மார்ச் 2024 அன்று தமது கடமைகளை பொறுப்பளித்ததன் பின்னர் விரைவில் இலங்கைக்கு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந் நிகழ்வில் பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சீஎல்எஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் வெளிநாடு செல்லவுள்ள படையினரின் குடும்பத்தினர் என பலர் அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.