Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd February 2024 11:31:46 Hours

213 வது காலாட் பிரிகேடின் 27 வது ஆண்டு நிறைவு

213 வது காலாட் பிரிகேடின் தளபதி கேணல் எச்ஏஏஎன்சி பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 213 வது காலாட் பிரிகேட் மத மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் அதன் 27வது ஆண்டு விழாவை கொண்டாடியது.

2024 பெப்ரவரி 18 அன்று இராணுவ மரபுகளின் படி சம்பிரதாயமான பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை தளபதிக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தளபதியினால், முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டு, படையினருக்கு உரை நிகழ்த்தியதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. படையினருக்கான ஒரு பொழுதுபோக்கு நிகழ்வுடன் அன்றைய நாள் நிறைவு பெற்றது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அன்றைய நிகழ்வில் பங்குபற்றினர்.