Header

Sri Lanka Army

Defender of the Nation

12th February 2024 12:03:28 Hours

கிழக்கு பாதுகாப்பு படையினரால் கந்தளாய் மத்திய கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடநெறி

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகம் மொழி நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும் கலாசார புரிதலை மேம்படுத்துவதற்கும், கந்தளாய் மத்திய கல்லூரியின் 75 மாணவர்களுக்கு ஆறுமாத கால தமிழ் மொழி பாடநெறியை 2024 பெப்ரவரி 10 ஆம் திகதி ஆரம்பித்து.

கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சி ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், அப்பகுதியில் உள்ள சிங்களம் மற்றும் தமிழ் பேசும் மாணவர்களுக்கான மொழிப் பரிமாற்றத்தை எளிதாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதோடு தற்போது வெலிகந்த, செவனப்பிட்டிய, கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி, நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வளர்ப்பதில் மொழிப் புலமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கந்தளாய் மத்திய கல்லூரியின் அதிபர் திரு. லக்பிரிய பண்டார அவர்கள், கிழக்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மற்றும் இத்திட்டத்திற்கு தேவையான நிதியுதவி வழங்கிய சமகிதேசய அமைப்பின் தலைவி திருமதி சுமித்ரா ரத்நாயக்க ஆகியோருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சமயத் தலைவர்கள், 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், கந்தளாய் வலயக் கல்விப் பணிமனையின் பிரதிப் பணிப்பாளர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.