Header

Sri Lanka Army

Defender of the Nation

09th February 2024 14:00:58 Hours

7 வது இலங்கை பொறியியல் படையணி படையினரால் தம்புள்ளை கல்வெட்டியவில் பாலம் புனரமைப்பு

7 வது இலங்கை பொறியியல் படையணியின் படையினரால் தம்புள்ளை கல்வெட்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 04) இடிந்து விழும் நிலையில் காணப்பட்ட பாலம் புனரமைக்கப்பட்டது. இந்த பாலம் அமைந்துள்ள பாதை அருகில் உள்ள 1,000 மக்களின் பிரதான பாதையாக காணப்படுகின்றது.

பிரதம களப் பொறியியலாளரும் பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ பீஎஸ்சி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பாலத்தின் ஆபத்தான நிலை குறித்து கௌரவ பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் அவர்களின் அறிவுறுத்தல்களுக்கு அமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களினால் பாலத்தின் கட்டுமானப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அன்றைய தினம் குறித்த இடத்திற்கு விஜயம் செய்து 7 வது பொறியியல் படையணி படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெற்றிகரமான திட்டத்தின் பின்னணியில் உள்ள கூட்டு முயற்சியை எடுத்துக்காட்டி நிர்மானப் பணியை பாராட்டினார். நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்து கொண்டனர்.