Header

Sri Lanka Army

Defender of the Nation

05th February 2024 19:21:57 Hours

இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன் கேணல் மன்தீப் சிங் நேகி, அவர்கள் 2024 பெப்ரவரி 2 ம் திகதியன்று, இராஜதந்திர உறவின் சம்பிரதாயத்திற்கு அமைய யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.

வருகை தந்த இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி, மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்.

சந்திப்பின் போது, அண்டை இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தும் இராணுவ இராஜதந்திரம், சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத் திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயல்முறை தொடர்பாக யாழ் தளபதி மற்றும் லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.

லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் அதிதிகள் பதிவேட்டில் எண்ணங்களை பதிவிட்டார். மேலும், லெப்டினன் கேணல் மந்தீப் சிங் நேகி, இந்திய போர் வீரர் நினைவு தூபியில் உயிரிழந்த போர் வீரர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தினார்.

இறுதியில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மற்றும் இந்திய உதவி பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக்கொள்ளப்பட்டன.