Header

Sri Lanka Army

Defender of the Nation

31st January 2024 20:39:02 Hours

பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவத் தளபதி காயமடைந்த பரசூட் வீரர்களை பார்வையிட வைத்தியசாலைகளுக்கு

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஜிடிஎச் கமல் குணரத்ன (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ எம்பீல் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் 76 வது சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகையின் போது பரசூட் பாய்ச்சலின் போது காயமடைந்த இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களை பார்வையிட்டனர்.

இதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், இராணுவத் தளபதியும் முதலில் காயமடைந்த விமானப்படை வீரர்களை தேசிய மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டதுடன், அடுத்த்தாக இரு அதிகாரிகளும் கொழும்பு இராணுவ மருத்துவமனைக்கும் சென்றனர்.

காயமடைந்த வீரர்கள் மீது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தனது கவலையைத் தெரிவித்ததோடு, விரைவாக குணமடைய அவர்களுக்கு சிறந்த தரமான மருத்துவ சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

2024 ஜனவரி 30 அன்று காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெற்ற தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஒத்திகையின் போது இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய இரண்டையும் சேர்ந்த பரசூட் வீரர்கள் காயமடைந்தனர்.