Header

Sri Lanka Army

Defender of the Nation

29th January 2024 19:11:37 Hours

இந்து - பசிபிக் முயற்சி 2024க்கான தளபதி பதவி நிலை பிரதானியை சந்திப்பு

இந்து-பசிபிக் முயற்சி 2024 இன் தளபதியான அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையின் கொமடோர் மைக்கல் ஹாரிஸ் ஓஏஎம் அவர்கள் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஎச்கேஎஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களை இன்று (29) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.

சுமுகமான உரையாடலின் போது, இந்து பசிபிக் முயற்சி 2024 பயிற்சியில் இருதரப்பு ஈடுபாடு மற்றும் இந்து-பசிபிக் பிராந்தியம் தொடர்பான பாதுகாப்பு விடயங்களில் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

சந்திப்பின் முடிவில், பதவி நிலை பிரதானி இந்து-பசிபிக் முயற்சி 2024 இன் தளபதி மற்றும் வருகை தந்த ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமண்டா ஜோன்ஸ்டன் சிஎஸ்சி, பதவி நிலை பிரதானி அலுவலகம் கேணல் ஒருங்கிணைப்பு கேணல் ஈஜிசி குணசேன ஆரடப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஏஸ்சி, இந்து-பசிபிக் முயற்சி 2024 தளபதி அலுவலக பதவி நிலைப் பிரதானி லெப்டினன் கேணல் ரஸ் லோவ்ஸ் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.