Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2024 19:30:18 Hours

இராணுவ புலனாய்வு தகவலுக்கமைய அம்பலத்தோட்டையில் இரகசிய கஞ்சா விநியோக நிலையம் முற்றுகை

2024 ஜனவரி 22 ஆம் திகதி அம்பலாந்தோட்டை ரெதியகமவில் இரகசிய கஞ்சா விநியோக நிலையம் ஒன்றை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் முற்றுகையிட்டனர். இந்த சோதனையில் 2 கிலோ கஞ்சாவுடன் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தின் இராணுவ புலனாய்வு படையணிக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையம் இந்தச் சுற்றிவளைப்பை முன்னெடுத்தது. இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.