Header

Sri Lanka Army

Defender of the Nation

24th January 2024 19:33:12 Hours

21 வது படைப்பிரிவின் புதிய தளபதியின் முதல் உத்தியோகபூர்வ விஜயம்

21 வது காலாட் படைபிரிவின் தளபதியாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் எச்எச்கேஎஸ்எஸ் ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆசீடிஎஸ்பீஎஸ்சீ அவர்கள் 211 காலாட் பிரிகேட், 9 மற்றும் 5 வது (தொ) கஜபா படையணிகளுக்கு 20 ஜனவரி 2024 ம் திகதியன்று தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். .

இவ் விஜயத்தின்போது, பிரிகேட் தளபதி மற்றும் அந்தந்த படையலகுகளின் கட்டளை அதிகாரிகளினால் வருகை தந்த படைப்பிரிவு தளபதிக்கு தற்போதைய வகிபங்கு மற்றும் பணிகள் தொடர்பான விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து படையலகுகள் மற்றும் பிரிகேட் ஆகியவற்றின் படையினருக்கு உரையாற்றினார்.

இந்த விஜயத்தின் போது, 211 வது காலாட் பிரிகேட் தளபதி, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட படையணியின் பிரதான வாயிலைத் திறப்பதற்கு அழைக்கப்பட்டார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.