Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2024 20:10:04 Hours

வன்னி தளபதியின் கள விஜயம்

வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபீஎடிடபிள்யூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயத்தை 59, 64, 68 வது காலாட் படைபிரிவுகளுக்கும், கட்டளைப் பிரிகேட்கள் முன்னரங்க பராமரிப்புப் பகுதி ஆகியவற்றிற்கு 2024 ஜனவரி 16 மற்றும் 17 ம் திகதிகளில் விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது இராணுவ சம்பிரதாயங்களுக்கு அமைய படைப்பிரிவின் தளபதிகள்,பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிக்கு அன்பான வரவேற்பு அளித்தனர்.

மேலும், வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மரக்கன்றுகளை நட்டு, குழு படங்கள் எடுத்துகொண்டார். சிரேஷ்ட அதிகாரிகளினால் ஒவ்வொரு இடத்திலும் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலரும் கலந்துகொண்டனர்.