Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd January 2024 20:15:15 Hours

“சீகல்” பயிற்சி 2024 வெற்றிகரமாக நிறைவு

வடக்கு கடல் பகுதியில் யாழ் குடாநாட்டு பாலைத்தீவில் “சீகல்” எனும் நீர் பயிற்சி ஜனவரி 07– 12 வரை முப்படையினரின் பங்கேற்புடன் இடம்பெற்றது...

இந்த பயிற்சியில் படையினருக்கு நீர் பணி படையைத் தூண்டுதல், கடற்கரையை கைப்பற்றல் மற்றும் பாதுகாத்தல், முக்கியப் படையை தரையிறக்குதல், எதிர் படையை நடுநிலையாக்குதல், பணயக்கைதிகளை மீட்டல், உயிரிழந்தவர்களை வெளியேற்றுதல் மற்றும் அனர்த நிவாரணத்திற்காக மனிதாபிமான உதவிகளை வழங்குதல் போன்றன பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இராணுவத்தின் 42 அதிகாரிகள் மற்றும் 360 சிப்பாய்கள், கடற்படையின் 62 அதிகாரிகள் மற்றும் 618 சிப்பாய்களும், விமானப்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 09 சிப்பாய்களும் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.

இறுதிப் பயிற்சி வியாழக்கிழமை ஜனவரி 12 ம் திகதி இடம்பெற்றதுடன் 51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூபி வெலகெதர ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் வடக்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் டிஎம்எஎ தென்னகோன் டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ என்டியூ, அப்பகுதியைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் இறுதிப் பயிற்சியை பார்வையிட்டனர்.