Header

Sri Lanka Army

Defender of the Nation

16th January 2024 20:17:25 Hours

புதிய நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் ஒழுக்க பணிப்பகத்திற்கு விஜயம்

இலங்கை இராணுவத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் டபிள்யூ.டபிள்யூ.எச்.ஆர்.ஆர்.வி.எம்.என்.டி.கே.பி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் புதன்கிழமை (ஜனவரி 10) இராணுவத் தலைமையக ஒழுக்க பணிப்பகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் அவர்களை ஒழுக்க பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏசிஏ டி சொய்சா யுஎஸ்பீ எச்டிஎம்சீ எல்எஸ்சீ அவர்கள் நுழைவாயிலில் வரவேற்றார். அதன் பின்னர், ஒழுக்க பணிப்பகத்தின் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. பின்னர், அன்றைய நிகழ்வின் நினைவாக நிறைவேற்று பணிப்பாளர் நாயகத்துடன் ஒழுக்க பணிப்பகத்தினர் குழு படம் எடுத்து கொண்டனர்.

இந் நிகழ்வில் ஒழுக்க பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.