Header

Sri Lanka Army

Defender of the Nation

17th January 2024 19:40:14 Hours

1 ஆம் படைக்கு 'அங்கம்பொர', பாரம்பரிய தற்காப்புக் கலை அறிமுகம்

இலங்கை இராணுவ அங்கம்பொர கழகம் 1 ஆம் படை மற்றும் அதன் கட்டளை படையலகுகளுக்கான ஒரு மாத கால 'அங்கம்பொர' பயிற்சி பாடநெறியை துறைசார் நிபுணர்களின் மேற்பார்வையின் கீழ் ஆரம்பித்தது.

1 ஆம் படை தலைமையகத்தில் 2024 ஜனவரி 14 திகதி அன்று 1 ஆம் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்பி அமுனுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவ அங்கம்பொர குழுவின் தலைவர், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பாடநெறி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.