Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2024 18:14:07 Hours

8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையினர், நீர்ப்பாசனத் துறையினர், உள்ளூர்வாசிகலுடன் குளம் பாதுகாப்பு

சாகாம குளத்திற்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர் விடுத்த கோரிக்கைக்கு இணங்க 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 09 ஜனவரி 2024 அன்று நிலவும் காலநிலை காரணமாக குளக்கட்டில் ஏற்பட்ட பிளவை சரி செய்வதற்கான பணியை மேற்கொண்டனர்.

தம்பிலுவில் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் இராணுவத்தினர் மண் மூட்டைகள் வைத்து குளக்கரையை புனரமைத்தனர். 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ. சந்திரசிறி ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 242 வது காலாட் பிரிகேட் தளபதி மற்றும் 8 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி ஆகியோர் இத் திட்டத்தை மேற்பார்வையிட்டனர்