Header

Sri Lanka Army

Defender of the Nation

14th January 2024 11:24:59 Hours

குடாஓயா கமாண்டோ பயிற்சி பாடசாலையில் பாடநெறி 51 இ,எப் மற்றும் ஜீ விடுகை அணிவகுப்பு

கமாண்டோ பாடநெறி 51 இ,எப் மற்றும் ஜீ ஆகியவற்றின் விடுகை அணிவகுப்பு குடாஓயா கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலையில் சனிக்கிழமை (13) நடைப்பெற்றது. கமாண்டோ படையணி படைத்தளபதி மேஜர் ஜெனரல் பீஜீபீஎஸ் ரத்நாயக்க ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டிசி அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கமாண்டோ படையணியின் 3 அதிகாரிகள் மற்றும் 162 சிப்பாய்களுக்கு பாடநெறி 51 இ,எப் மற்றும் ஜீ ஊடாக பட்டமளிக்கப்பட்டது.

பிரதம அதிதி, படையணி படைத்தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளினால் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பட்டம் பெற்ற வீரர்களுக்கு அவர்களது பெற்றோர்களால் கமாண்டோ சின்னம் அணிவித்துடன், இராணுவத் தளபதி படையணி படைத்தளபதி மற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அவர்களுக்கு மதிப்புமிக்க கபில தலைகவசத்தினை அனிவித்தார்.

இந்நிகழ்வில் கமாண்டோ பயிற்சி பாடநெறியில் சிறந்து விளங்கிய பட்டதாரிகளுக்கு வெற்றிக்கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இராணுவத் தளபதி தனது உரையின் போது புதிதாக இணைந்த கமாண்டோக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

முறையான நடவடிக்கைகளுக்குப் பிறகு, மாதிரி காட்சிகளில் ஸ்னைப்பர் தாக்குதல், கமாண்டோ உறுதியான நேரடி துப்பாக்கிச் சூடு, கமாண்டோ நேரடி சண்டை கண்காட்சி, பணயக்கைதிகள் மீட்பு நடவடிக்கைகள், பயங்கரவாத எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், கே9 (போர் நாய்கள்)-காட்சிகளைக் கையாளுதல், மற்றும் பாராசூட் கண்காட்சிகள் என்பன இடம்பெற்றன. இந்த காட்சிகள் பார்வையாளர்களை மெய்சிலிர்ப்பு மற்றும் உற்சாகத்துடன் கவர்ந்தன.

விழாவின் நிறைவில், பாராசூட் பயிற்சியை மேற்கொண்ட வெளிநாட்டு அதிகாரிகளுடன் இராணுவத் தளபதி உரையாடலில் ஈடுபட்டார்.

அதனை தொடர்ந்து கமாண்டோ படையணி படைத்தளபதி அவர்கள் புதிய லிடோ ஜம்ப் தளப் பகுதியினை திறந்து வைப்பதற்கு இராணுவத் தளபதியை அழைத்தார்.

பின்னர் இராணுவ தளபதிக்கு படையணி படைத்தளபதி அவர்கள் சிறப்பு நினைவுச் சின்னங்கள் வழங்கி, நன்றியுணர்வைத் தெரிவித்துக் கொண்டார். புறப்படுவதற்கு முன், இராணுவத் தளபதி கமாண்டோ படையணி பயிற்சி பாடசாலை விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் ஒரு பாராட்டுக் குறிப்பையும் பதிவிட்டார்.

விசேட பாராட்டு பெற்றவர்கள்

சிறந்த கமாண்டோ - லெப்டினன் எஸ்.எம்.எல்.டி கருணாரத்ன

சிறந்த ஊடற்தகுதி – சிப்பாய் ஐபீஎம்டி இளந்தர

சிறந்த துப்பாக்கி சுடுதல் – சிப்பாய் ஆர்கேஎஸ்டீ லக்ஷன்