Header

Sri Lanka Army

Defender of the Nation

30th December 2023 15:18:34 Hours

2 வது சமிக்ஞை பிரிகேட் அங்குரார்ப்பண நிகழ்வில் இராணுவ தளபதி

இலங்கை சமிக்ஞைப் படையணியின் புதிய 2 வது சமிக்ஞை பிரிகேடின் அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 29) பனாகொட இராணுவ முகாமில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் கலந்து கொண்டார்.

இலத்திரணியல் போர், இணைய மற்றும் செயற்கை நுண்ணறிவு, நடவடிக்கை மற்றும் மற்றும் ஆதரவு தகவல் நடவடிக்கைகள், மற்றும் போர் அல்லாத நடவடிக்கைகள் தொடர்பில் திட்டமிடல், ஒருங்கிணைத்தல், செயற்படுத்தல் மற்றும் மேற்பார்வையிடல் போன்றவற்றிற்காக 2 வது சமிக்ஞை பிரிகேட் உருவாக்கப்பட்டுள்ளது.

வருகை தந்த இராணுவத் தளபதியை இலங்கை சமிக்ஞை படையணியின் படைத் தளபதி மற்றும் புதிய 2 வது சமிக்ஞை பிரிகேடின் தளபதி ஆகியோர் வரவேற்றனர். இராணுவத் தளபதி அவர்கள் இலங்கை சமிக்ஞை படையணியின் வீரமரணமடைந்தவர்களின் நினைவுத் தூபியில் மலரஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, இராணுவத் தளபதி மற்றும் அனைத்து கௌரவ அதிதிகளும் அங்குரார்ப்பண நிகழ்வுகளுக்காக இலங்கை சமிக்ஞைப் படையணியின் தலைமையக மாநாட்டு மண்டபத்திற்கு அழைக்கப்பட்டனர்.

இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.எஸ். ரத்நாயக்க என்டியூ அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதுடன், பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஏ.கே.டி.அதிகாரி யூஎஸ்பீ அவர்கள் புதிய 2 வது சமிக்ஞை பிரிகேடின் உருவாக்கம் மற்றும் அதன் பங்கு பற்றிய விரிவான விளக்கத்தை வழங்கினார்.

நிகழ்வின் நினைவாக இராணுவத் தளபதி அனைத்து அதிகாரிகளுடனும் குழு படம் எடுத்துக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, இலங்கை சமிக்ஞைப் படையணியின் படையினர் சீன அரசினால் வழங்கப்பட்ட பல்வேறு மின்னணு போர் உபகரணங்கள் குறித்த செயல்விளக்கத்தை நடாத்தினர்.

நிகழ்வின் நினைவாக இராணுவத் தளபதி முகாம் வளாகத்தினுள் மரக்கன்று ஒன்றை நட்டு வைப்பதற்காக அழைக்கப்பட்டார்.

தேநீர் விருந்துபசாரத்தின் போது இராணுவத் தளபதியுடன் பங்கேற்பாளர்கள் நெருக்கமான உரையாடலை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் இராணுவத் தளபதியின் வருகையைப் பாராட்டி இலங்கை சமிக்ஞைப் படையணியின் படைத் தளபதி நினைவுச் சின்னம் வழங்கினார்.

இதேவேளை, இலங்கை சமிக்ஞைப் படையணியின் ரக்பி வரலாற்றுப் புத்தகத்தின் பிரதியும் இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்பட்டது.

2 வது சமிக்ஞை பிரிகேடின் திறப்பு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.