Header

Sri Lanka Army

Defender of the Nation

31st December 2023 22:34:27 Hours

2024ம் புத்தாண்டு அனைவருக்கும் செழிப்புமிக்க ஆண்டாக அமைய வாழ்த்தும் இராணுவத் தளபதி

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவரது புத்தாண்டு செய்தியில், இராணுவத்தின் அனைவருக்கும் பிறக்கும் 2024 புத்தாண்டு செழிப்பு மிக்கதாய் அமைய வாழ்த்துகிறார்.

அவரது முழு புத்தாண்டு வாழ்த்து செய்தி இங்கே:

அபிமானமிகு தேசத்தின் பாதுகாவலராய் தாய் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில் என்றும் நிகரற்ற சேவையினை வழங்கும் இலங்கை இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பிறக்கும் 2024ம் வருடத்திற்கான எனது இதய பூர்வமான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அமைதியான தேசத்தின் சகோதரத்துவத்துடனான பிரஜைகளாக இலங்கை மக்கள் புதிய வருடத்திற்காய் தாயாராவது பசுமையான எதிர்பார்ப்புக்களுடனையே ஆகும். அந்த நன் மக்களின் எதிர்பார்ப்புக்களின் பக்க பலமாய் இருக்க வேண்டிய பிரதான பொறுப்பு படைவீரர்களான எமக்கு உள்ள தென்பதை பிறக்கும் இப் புதுவருடத்தில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். தாய் நாட்டிற்கு எதிராக காணப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள், இயற்கை அனர்த்தங்கள் மற்றும் இடர்கள் உட்பட பல்வகை சவால்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு என்றும் முன்னனியில் இருந்த இராணுவம் தற்போது நாட்டில் நிலவும் அமைதி நிலைமையை உருவாக்குவதில் விசேட பங்கினை வழங்கியுள்ளது என்பதை பெருமையுடன் இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுகின்றேன். அக்காலப் பகுதியில் தமது உயிர்களை தியாகம் செய்த வீரமிகு படையினரையும் காயமடைந்த படையினரையும் கௌரவத்துடன் நினைவு கூறுவதுடன், அவர்களில் இன்றும் சிகிச்சை பெறும் படையினர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன்.

இலங்கை தீவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பட்டை பாதுகாப்பது, நாட்டின் ஜனநாயகத்தை காப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், இராணுவத்தின் பிரதான பொறுப்பு என்பதை நான் என்றும் உங்களுக்கு ஞாபக படுத்துகின்றேன். பிறக்கும் புது வருடத்தில் அப்பொறுப்பினை நிறைவேற்ற கடமைப்பட்டுள்ளதுடன், அனைத்து பொறுப்புகளுடன் நாட்டிற்கு பாதுகாப்பு அளிப்பது எமது முதன்மை பொறுப்பென நம் மனதில் இறுத்திக்கொள்ளல் வேண்டும். இராணுவத்தின் பிரதான கடமை தேசத்தின் பாதுகாப்பு வழங்கல் என்ற போதிலும் அதன் பெருமை மிகு உறுப்பினர்களாகிய நாம் ஒருபடி மேலே சென்று சிறப்பான மனிதாபிமான சேவையினை தாய் நாட்டிற்கும், நாட்டு பிரஜைகளுக்கும் ஆற்றி உள்ளமை நாட்டு பிரஜைகள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் விடயமாகும். கடந்த வருடம் தேசிய பாதுகாப்பை உறுதி செய்தல், அனர்த்த நிலைமைகளை எதிர் கொள்ளல், தேசத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் போன்ற பல துறைகளில் முன்னோடியாக பெரும் பொறுப்பை நிறைவேற்றுவதில் வழங்கப்பட்ட பங்களிப்பு மிக உன்னதமானது. அவ்வாறே மேலும் நமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவது இராணுவ உறுப்பினர்களாகிய எமது அனைவரினதும் கட்டாய கடமையாகும். கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன நிலைமைகளில் நாட்டில் சுமுகமான வாழ்க்கையினை ஏற்படுத்துவதற்கும் நாட்டில் முழு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் இராணுவம் வழங்கிய பங்களிப்பு ஊடாக இராணுவத்தின் உயர் ஒழுக்கம், விளைத்திறனான திட்டமிடல் மற்றும் முன்மாதிரி செயற்பாடுகள் என்பன தெளிவாக வெளிக்காட்டப்பட்டன. இந்த அடிப்படை பொறுப்புகள் மற்றும் இதர கடமைகளை பிறக்கும் வருடத்திலும் நேர்த்தியாக முன்னெடுத்தல் வேண்டும். அத்தோடு வள முகாமைத்துவத்தில் முன்மாதிரியாக இருத்தல் வேண்டும்.

இராணுவத்தின் போர் வலு, நடவடிக்கை திட்டமிடல் மற்றும் நிறுவன கட்டமைப்பு என்பன எதிர்கால சவால்களுக்கு பொருந்தக் கூடிய வகையில் புதுப்பித்து தொழிலாண்மை கொண்ட இராணுவமாக கொண்டு நடத்துவது எனது முதன்மை நோக்கமாகும். தற்போது பல்வேறு சவால்களை எதிர் கொண்டு பல இன்னல்கள் மற்றும் கஸ்டங்களை தாங்கி கொண்டு நீங்கள் ஆற்றும் கடமைகள் மற்றும் உங்கள் அர்ப்பணிப்புக்கு இச்சந்தர்ப்பத்தில் எனது நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். நாட்டின் தற்போதைய சமூக சவால்களுக்கு இராணுவ வீரர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினை தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி பொருத்தமான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் அவர்களின் நலனோம்பு விடயங்களை உறுதிப்படுத்துவதற்கும் நான் கவனம் செலுத்துகிறேன். கடந்த வருடத்தில் சேவையாற்றிய உங்களதும், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் இராணுவ குடும்பங்களின் உறுப்பினர்களின் நலனோம்பு விடயங்கள் தொடர்பில் பல திட்டங்கள் முன்னெடுக்க கிடைத்தமை குறித்து சந்தோசமடைவதுடன், அந்த நலனோம்பு திட்டங்களை தொடந்தும் முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என குறிப்பிட விரும்புகிறேன். இராணுவ உறுப்பினர்களுக்காய் இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் ஆற்றப்பட்ட சேவைக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவிப்பதோடு அப்பிரிவின் பிறக்கும் வருடத்திற்கான திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் வெற்றிபெற பிரார்த்தனை செய்கின்றேன்.

நாட்டின் எதிர்கால திட்டங்கள் மற்றும் இலக்குகளை அடையும் பொருட்டு வீரமிகு இராணுவம் என்ற வகையில் எமக்கு வழங்கப்படும் எல்லா கடமைகளையும் உச்ச அர்பணிப்புடன் ஒற்றுமையாகவும் நிறைவேற்றல் வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன். நாம் வெற்றி கொண்ட சுதந்திரத்தின் பெறுமதியினை அடுத்த தலைமுறையினர் அனுபவிக்கும் வகையில் இலங்கை இராணுவ உறுப்பினர்களாகிய நாம் வழி செய்திட வேணடிய பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது. அத்தோடு தற்போது இராணுவத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ள தேசிய மற்றும் சர்வதேச கௌரவம், கீர்த்தி மற்றும் விம்பத்தை பாதுகாக்கும் பொருட்டு நீங்கள் அனைவரும் செயற்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.

இறுதியாக இராஜியத்தின் பாதுகாவலர்களாக சேவையாற்றும் உங்களுக்கும், ஓய்வு பெற்ற அனைவருக்கும், சிவில் ஊழியர்களுக்கும் உங்கள் அனைவரதும் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிறந்த 2024 ம் வருடத்தின் எண்ணங்களை சிறப்பாக வெற்றி கொள்வதற்கு தேவையான சக்தி, தைரியம் மற்றும் அதிஷ்டம் கிட்டவும் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, சௌபாக்கியம் மற்றும் நோயற்ற நல்வருடமாக அமையவும் பிரார்த்திக்கின்றேன்.

எச்.எல்.வீ.எம் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ

லெப்டினன் ஜெனரல்

திகதி :- 2024 ஜனவரி மாதம் 01ம் திகதி இராணுவ தளபதி