Header

Sri Lanka Army

Defender of the Nation

27th December 2023 19:37:12 Hours

இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் யு.டி விஜேசேகர அவர்களின் சேவைக்கு பாராட்டு

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 35 வருட பணியின் பின்னர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றுசெல்வதற்கு முன்னர் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை இன்று காலை (27) அவரது குடும்ப உறுப்பினர்களுடன் சந்தித்தார்.

சுமூகமான உரையாடல்களின் போது, இராணுவத் தளபதி ஓய்வு பெறும் சிரேஷ்ட அதிகாரியின் சேவைகளைப் பாராட்டியதுடன், போர்க்களத்திலும் போருக்குப் பின்னரான சூழ்நிலையிலும் நினைவுகளை நினைவு கூர்ந்தார். இராணுவத் தளபதி அவரது எதிர்காலத் திட்டங்கள், வாய்ப்புகள் குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்விற்கு அழைக்கப்பட்ட மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் சில இன்பங்களைப் பகிர்ந்து கொண்ட இராணுவத் தளபதி, இராணுவத் தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு அவரது குடும்ப உறுப்பினர்களால் அவரது வாழ்க்கை முழுவதும் வழங்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவைப் பாராட்டினார்.

மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதியின் அன்பான அழைப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், இராணுவத்தில் தனது பல்வேறு கடமைகளை நிறைவேற்றுவதில் தளபதி அவருக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கு தனது நன்றியைத் தெரிவித்தார். சந்திப்பின் முடிவில், லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரிக்கு பாராட்டு சின்னமாக விசேட நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கியதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு விசேட பரிசுகளையும் வழங்கினார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விபரம் பின்வருமாறு;

மேஜர் ஜெனரல் யூ.டி விஜேசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சீ அவர்கள் 1988 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்துக் கொண்டு தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி பாடநெறி 30 யை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், அவர் இரண்டாம் லெப்டினன் நிலையில் 09 ஜூன் 1990 இல் இலங்கை சிங்க படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர் படிப்படியாக நிலை உயர்வு பெற்று 07 மே 2021 ம் திகதி மேஜர் ஜெனரல் பதவிக்கு நிலை உயர்வு பெற்றார்.

அவர் ஓய்வுபெறும் போது இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதி ஆகிய பதவிகளை வகிக்கின்றார். 7 வது சிங்க படையணியின் அதிகாரி கட்டளை மற்றும் அணி தளபதி, காலாட் பயிற்சி நிலையத்தின் அதிகாரி பயிற்றுவிப்பாளர், முதலாவது சிங்க படையணியின் அதிகாரி கட்டளை, 231 மற்றும் 522 வது பிரிகேட்களின் பிரிகேட் மேஜர், ஹைட்டி ஐநா அமைதிகாக்கும் படையின் அதிகாரி கட்டளை, இராணுவ தலைமையக செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 2 ( ஐநா கிளை ), 20 வது சிங்க படையணியின் கட்டளை அதிகாரி, இராணுவ தலைமையக பணிநிலை பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரி 1, பயிற்சிக் கட்டளையின் பதில் கேணல் பொதுப்பணி 1, இராணுவத் தலைமையக செயல்பாட்டு பணிப்பகத்தின் கேணல் பொதுபணி, 593 வது காலாட் பிரிகேடின் பதில் தளபதி, இராணுவத் தலைமையகத்தின் இராணுவ தலைமையக இராணுவ செயலாளர் 2 மற்றும் இராணுவச் செயலாளர் 3, பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பிரதித் தளபதி, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதி, முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி, கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

போர்க்களங்களில் அவரது வீரம் மற்றும் துணிச்சலுக்காக, அவருக்கு ‘ரண விக்கிரம பதக்கம்’ மற்றும் ‘ரண சூரபதக்கம்’ என்பன வழங்கப்பட்டுள்ளன.

அணி தலைவர் தந்திரோபாயப் பாடநெறி, அணித் தலைவர் போர்த் தலைமைப் பாடநெறி, அலகு நிர்வாகப் பாடநெறி, படையலகு ஆதரவு ஆயுத பாடநெறி, இராணுவ கட்டளை மற்றும் பணிநிலை பாடநெறி, பாதுகாப்பு இணைப்பாளர் திசைமுகப்படுத்தல் பாடநெறி, இராஜதந்திரம், தலைமைத்துவம் மற்றும் குழுவை உருவாக்கும் பாடநெறி, காலாட்படை இளம் அதிகாரிகள் பாடநெறி - பாகிஸ்தான், கனிஷ்ட கட்டளை பாடநெறி – இந்தியா, அடிப்படை பாராசூட் பாடநெறி – இந்தியா, சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி – இந்தியா, தேசிய ஆயுதப் படைகளின் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி – இந்தோனேசியா, ஐக்கிய இராச்சியம் ரோயல் கல்லூரியின் பாதுகாப்பு பட்ட படிப்பு மற்றும் ஹைட்டி ஐநா தூண்டல் பயிற்சி பாடநெறி போன்ற பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கற்கைகளை கற்றுள்ளார்.

சிரேஷ்ட அதிகாரி, கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் பட்டபின்படிப்பு டிப்ளோமா, இந்தியா தேவி அஹில்யா விஸ்வ வித்யாலயவில் பாதுகாப்பு முகாமை முதுநிலை பட்டபடிப்பு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் கலை ஐக்கிய இராச்சியம், லண்டன் கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச பாதுகாப்பு மற்றும் வியூகம் கற்கையில் முதுகலை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் முதுநிலை போன்ற பல இராணுவம் அல்லாத உயர் கல்வி கற்கைகளையும் பின்பற்றியுள்ளார்.